ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 2

மதுரை நோக்கி போகிறேன்… தொடரும்…என்று முடித்திருந்தேன் கடந்த பதிவை, ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு மூன்று மணி நேரத்தில் மதுரை வருகிறது, டிரைவர் பெரியசாமி இளையராஜா பாடல்களை ஓடவிட்டது இரண்டாயிரம் கிலோமீட்டர் நீளமான எமது தமிழ் நாட்டு பயணம் இளையராஜாவின்  காதல், சோக  பாடல்களுடனேயே கடந்துபோனது ஒரு சுகனுபவம் . ( டிரைவர் பெரியசாமி பற்றியும் அந்த பாடல்களுக்கு பின்னால் இருக்கிற அவனின் காதல் கதை பற்றியும்  அடுத்த அடுத்த  பதிவுகளில் பார்ப்போம்.) மதுரை எதோ பிடித்திருந்தது, அழகு என்று இல்லாவிட்டாலும், பரபரப்பான நகரம், சுறுசுறுப்பாக இயங்கிகொண்டு இருந்தது.  தமிழகத்தின் கலாச்சார நகரம், தூங்கா நகரம் எண்டு சொன்னார்கள் , இரவு பதினோரு மணி அளவில் வீதிக்கு வந்து பார்த்தேன் , உண்மை தான். இந்தியாவில் படம் பார்ப்பது நல்ல ஒரு அனுபவம் , அது பார்த்தால் தான் புரியும் , சூப்பராய் இருக்கும் என்று யாரோ சொல்லி இருந்தார்கள் , மதுரையில் தூங்கா நகரம் பார்க்க வேண்டும் என்று நானும் டிரோஷனும் பிளான் போட்டோம் , ஆனால் முடியாமல் போய்விட்டது. பின் சத்தியமில் “யுத்தம் செய்” பார்த்த கதை பெரிய சாமியின் கதையோடு அடுத்த எபிசோட்டில் வருகிறது.   மீனாட்சி அம்மன் கோவில் போனோம் , கலை மற்றும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்ந்து நிற்கிறது கோயில். அம்மனை தரிசிக்க வரிசையில் நின்ற பொது , ஒரு வயசான பெரியவரிடம் பேச்சு கொடுத்தேன். . மதுரை பக்கம் ஊராம் , விவசாயம் பார்ப்பவராம்.. நான் சிலோனில் இருந்து வந்திருப்பதாக அவர் கேட்டு நான் சொன்னேன், பஸ்லையா வந்தீக … More ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 2

ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 1

ஏராளமான சம்பவங்களையும் , அனுபவங்களையும் தந்திருந்தது சென்ற மாதம் போன இந்திய பயணம். பயணக் கட்டுரை ஒன்றாக எழுதவேண்டும் என்று பல விடயங்களை நினைத்து வைத்திருந்தேன்.  பிஸியான எக்ஸாம் மாதம் இது , வேறு வேலைகளும் வந்து சூழ்ந்து கொண்டதால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. சம்பவங்களை நினைத்து பார்க்கின்ற பொது பல விடையங்களும் நினைவில் இல்லை .  ஆனால் சில மனிதர்களும் அவர்களின் முகங்களும் அப்படியே நினைவில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது , நாட்கள் பல கடந்தும் கூட.    அப்படி இன்றும் நினைவில் நிற்கும் சில மனிதர்களை பதிகிறது இந்தப்ப் பதிவு. எமது  இரண்டாம்  நாள் பயணம், ஒரு மாலையில்  தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து ராமநாத புரத்தில் தங்குவதொடு முடிவடைகிறது, அடுத்த நாள் ராமேஸ்வரம் பார்ப்பதாக ஏற்பாடு.  காலையிலேயே பாம்பன் பாலத்தையும் தாண்டி ராமேஸ்வரம் சென்றோம்..  எனக்கும் டிரோஷனுக்கும் எம் மதம் சார்ந்த நம்பிக்கைகளிலும் … More ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 1

ஈரான் திரைப்பட விழாவும் இடையில் நின்ற படமும்

“Childrens of heaven”, “The colour of paradise” என்ற மஜித் மஜிடியின் ஈரானிய திரைப்படங்களை பார்த்திருந்ததால் ஈரான் திரைப்படங்கள் மீது எப்போதுமே ஒரு காதல் இருந்ததுண்டு. மனித நேயத்தையும், மனித உறவுகளின் நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை அவை. ஈரான் படங்களின் கலரும், மனிதர்களும், சம்பவங்களும் மூடு பனி, வீடு, முள்ளும் மலரும் போன்ற எண்பதுகளின் பாலு மகேந்திரா, மகேந்திரன் படங்களை ஒத்திருக்கும். எதோ ஒரு அழகுணர்ச்சியும், சோகமும் ஒட்டிக்கொண்டு இருக்கும் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் … More ஈரான் திரைப்பட விழாவும் இடையில் நின்ற படமும்

மனசுக்குள்ள மைனா…மைனா

மைனா நல்ல படமா, ரசனைக்குரியதா, எல்லோருக்கும் பிடிக்குமா  என்று எனக்கு சொல்ல தெரியல, ஆனாலும் எழுதணும் போல இருந்திச்சு மைனாவ பற்றி, எதோ அங்கங்க ஒரு தரமான ஆர்ட் ப்லிமுக்கான சாயல் தெரியுது, ஒளிப்பதிவாளர் நிறையவே மினக்கெட்டு இருக்கிறார்.. பசுமையான அந்த  இயற்கையை அப்படியே ரசிக்க தருவதற்கு. ஒட்டு மொத்த படமும் கண்களுக்கு குளுமை.    விளம்பரங்கள் உணர்வுகளை தூண்டியது , நண்பன் ஒருவன் நல்ல இருந்திச்சு என்று பேஸ் புக்குல போட்டான்.  காதலாகி,  கசிந்து , … More மனசுக்குள்ள மைனா…மைனா

கூட்டத்தில் நான் தேடிய செவ்வந்திப்பூக்கள்….

பிறந்தது முதலே எம் வாழ்க்கை பல தெரிவுகளின் ஊடாக தான் பயணித்துக்கொண்டு இருக்கிறது. யதார்த்தமாக,  எம்  ரசனைக்கு  ஏற்ப தெரிவுகளை அமைத்துகொள்வதிலே நாம்  அதிகம் நேரம் செலவிடுகிறோம். நாம், எம் வாழ்க்கை என்பதே நாம் சார்ந்த தெரிவுகளின் பிரதி விம்பம்   தான்.   ஆறாவது தடவையாக இருக்கும் என நினைக்கிறேன் , புத்தகத் திருவிழாவுக்கு இந்த முறை நான் செல்வது. வழமை போலேவே இருந்தது கூட்டம், இம்முறை அனைத்தையும் குறுகிய நிலப்பரப்புக்குள் அடக்கியது நிறையவே நெருக்கடியாக இருந்தது. இருந்தும்  பூபாலசிங்கம் புத்தக சாலை, கிழக்கு பதிப்பகம் , சேமமடு புத்தக நிலையம், எக்ஸ்போ கிராபிக்ஸ் நிறுவனங்களில் தேவையானவற்றை வாங்கிகொண்டேன். … More கூட்டத்தில் நான் தேடிய செவ்வந்திப்பூக்கள்….

எவனோ ஒருவன் வாசிக்கிறான்…..இருட்டில் இருந்து

வாழ்க்கை என்பதே பல மனிதர்களும், அவர்களின் வேறுபட்ட முகங்களும் சங்கமித்துக்கொள்ளும் பல நிகழ்வுகளின் கோவை தான். இதனை வருட வாழ்க்கையில் எத்தனை மனிதர்களை சந்தித்திருக்கிறோம். அவர்கள் தொடர்பான ஆயிரம் ஆயிரம் நினைவுகளுடன்  தான் வாழ்க்கை பயணப்பட்டுக்கொண்டு இருக்கிறது . சன் டிவியில் ஏந்திரன் திரைப்படத்துக்கான trailer வெளியிட்டுக்கொண்டு இருந்தார்கள். ரஜினி , வைரமுத்து, பார்த்தீபன்  என்று  சில பல முக்கியமான நபர்களின்  பேச்சுக்களை கேட்டுக்கொண்டு இருந்தேன். எல்லோருமே  கலாநிதி மாறனை புகழ்வதிலேயே காலத்தை செலவழித்துக்கொண்டு இருந்தார்கள், படத்துக்கான அனைத்து  விசுவல் வெளிப்பாடுகளிலும் ஏந்திரன் என்ற பெயரை விட கலாநிதி மாறன் என்ற பெயரே பெரிய சைஸ் எழுத்துக்களாக இருந்தது. பணத்துக்கு தான் அத்தனை பலமும் இருக்கிறது, யார் என்ன சொன்னாலும். பரவாயில்லை,  இத்தனைக்கும் நடுவில் இக்கதையில் நாயகனின் சுஜாதாவின்  பெயர் இருக்கிறதா என்று தேடினேன், ஏன் கண்ணில் படவில்லை , யாராவது நினைவு படுத்துகிறார்களா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன், இல்லவே இல்லை.. நான் அறிந்து ஏந்திரன் படம் சுஜாதாவின் “ஏன் … More எவனோ ஒருவன் வாசிக்கிறான்…..இருட்டில் இருந்து

TWO STATES : ஒரு தமிழ் பொண்ணும், பஞ்சாபி பையனும்

முதன் முதலில்  ஆங்கிலத்தில் நாவல் type ஆன புத்தகம் ஒன்றை வாசித்து முடித்திருக்கிறேன், இருநூற்றைம்பது பக்கங்களுக்கு மேல் இருக்கும் இந்த நாவல், ஒரு காதலில் இருந்து  , கல்யாணம் வரையிலான  கதையினை சொல்ல வருகிறது. சேட்டன் பகத் நவீன எழுத்தாளரால் படைக்கப்பட்டு இருக்கும்  இது  , இன்றைய இந்தியாவின் இளைய வாசகர்களின் கைகளில் தவழும் Best Selling  நாவல். எனக்கு ஆங்கில புத்தகங்களில் அதிகம் நாட்டம் இல்லை தான் ,   I AM LOOSING MY VERGINITY என்ற Richard Brandson நின் அறுநூறு பக்க புத்தகத்துக்கு பிறகு, நீண்ட … More TWO STATES : ஒரு தமிழ் பொண்ணும், பஞ்சாபி பையனும்