Wings To Fly…முதற் சிறகாய்..ஒரு முயற்சி

நாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருடங்கள் தடைப்பட்டிருந்து, தனது சிறிய தாயுடன் இருந்து கல்விகற்று வரும் அவளது வாழ்க்கை தேடல்கள் மிக சில தான்… சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்ததில் எந்தவித வழிகாட்டுதலும் இல்லாமல் எதோ ஏகாந்தமாய் தான் அவளது கல்வி தொடர்ந்து கொண்டிருக்கிறது.. வயதுக்கு ஏற்ற அறிவு முதிர்ச்சி கூட அவளிடம் குறைவு தான் , பதினான்கு வயதேயான … More Wings To Fly…முதற் சிறகாய்..ஒரு முயற்சி

ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 1

ஏராளமான சம்பவங்களையும் , அனுபவங்களையும் தந்திருந்தது சென்ற மாதம் போன இந்திய பயணம். பயணக் கட்டுரை ஒன்றாக எழுதவேண்டும் என்று பல விடயங்களை நினைத்து வைத்திருந்தேன்.  பிஸியான எக்ஸாம் மாதம் இது , வேறு வேலைகளும் வந்து சூழ்ந்து கொண்டதால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. சம்பவங்களை நினைத்து பார்க்கின்ற பொது பல விடையங்களும் நினைவில் இல்லை .  ஆனால் சில மனிதர்களும் அவர்களின் முகங்களும் அப்படியே நினைவில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது , நாட்கள் பல கடந்தும் கூட.    அப்படி இன்றும் நினைவில் நிற்கும் சில மனிதர்களை பதிகிறது இந்தப்ப் பதிவு. எமது  இரண்டாம்  நாள் பயணம், ஒரு மாலையில்  தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து ராமநாத புரத்தில் தங்குவதொடு முடிவடைகிறது, அடுத்த நாள் ராமேஸ்வரம் பார்ப்பதாக ஏற்பாடு.  காலையிலேயே பாம்பன் பாலத்தையும் தாண்டி ராமேஸ்வரம் சென்றோம்..  எனக்கும் டிரோஷனுக்கும் எம் மதம் சார்ந்த நம்பிக்கைகளிலும் … More ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 1

மனசுக்குள்ள மைனா…மைனா

மைனா நல்ல படமா, ரசனைக்குரியதா, எல்லோருக்கும் பிடிக்குமா  என்று எனக்கு சொல்ல தெரியல, ஆனாலும் எழுதணும் போல இருந்திச்சு மைனாவ பற்றி, எதோ அங்கங்க ஒரு தரமான ஆர்ட் ப்லிமுக்கான சாயல் தெரியுது, ஒளிப்பதிவாளர் நிறையவே மினக்கெட்டு இருக்கிறார்.. பசுமையான அந்த  இயற்கையை அப்படியே ரசிக்க தருவதற்கு. ஒட்டு மொத்த படமும் கண்களுக்கு குளுமை.    விளம்பரங்கள் உணர்வுகளை தூண்டியது , நண்பன் ஒருவன் நல்ல இருந்திச்சு என்று பேஸ் புக்குல போட்டான்.  காதலாகி,  கசிந்து , … More மனசுக்குள்ள மைனா…மைனா

மதராசப்பட்டினமும், அழகிய தேவதையும்……

முரண்பாடான  முயற்சிகள் எப்போதுமே சுவாரசியமானவை, அழகானவை, வலிகளையும் தாண்டி எதோ ஒரு சுகானுபவம்  தருபவை.ரசிக்கும் படியான வாழ்க்கை சில விதிகளை தாண்டிய எம் முரண்பாடான எண்ணங்களின் வெளிப்படுதல்களிலேயே தங்கி இருக்கிறது. ஒரு வெள்ளைகார அழகிக்கும், ஒரு  அடிமைப்பட்ட இந்தியனுக்கும் ஏற்படும் முரண்பட்ட , விதிகளை மீறிய அழகிய  காதலும், அதன் எதிர்ப்புக்களும் தான்  மதராசப்பட்டினம் என்ற இந்த காலங்களை கடந்த காவியத்தின்   வன்லைன். அதிகம் அறிமுகம் இல்லாத இயக்குனர், ஆர்பாட்டம் இல்லாத நடிகர்கள் , பிரமிக்க வைக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட  படத்துக்கான விளம்பரங்கள் ஏற்படுத்திய தூண்டுதல்களையும்  தாண்டி, இது போன்ற நாம் பார்க்காத காலங்களின் கதைகளை கேட்பதிலும் பார்ப்பதிலும் எனக்கு  அதீத நாட்டம் இருக்கிறது. காலனித்துவ காலங்களில் நடந்த சம்பவங்கள், அதன் மனிதர்கள் … More மதராசப்பட்டினமும், அழகிய தேவதையும்……

அர்த்தம் உள்ள இந்து மதம் : எழுதுவது அனானி

இந்து மதத்தில் அர்த்தம் உண்டா என்று கேட்டு ஒரு பதிவு எழுதியிருந்தேன், பல பேருக்கு அசொகரிகங்களையும் , வெறுப்புக்களையும் கொடுக்கும் சர்ச்சையான விஷயம் தான்.அனாலும் பல பேர் அதை வாசித்து பாராட்டியும் இருந்தனர். சில பேர் ஏன் கருத்தை மறுதலித்து பின்னூட்டம் இட்டிருந்தனர். அப்படி ஒரு நியாயமானதும் , பக்குவமானதுமான ஒரு பின்னூட்டம் ஒரு அநோனியிடம் இருந்து வந்தது. எப்படி எனக்கு பலரின் நம்பிக்கைககளை கேள்வி கேட்க உரிமை உள்ளதோ, அந்த நம்பிக்கைகளை நிலை நிறுத்த உரிமை … More அர்த்தம் உள்ள இந்து மதம் : எழுதுவது அனானி

"யாமம்" ஏற்படுத்திய தாக்கம்

நாவல் என்றால் எப்போதுமே ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் எஸ். ராமகிருஷ்ணனின் இந்த நாவல் படித்து முடித்தவுடன் நிறையவே வலுப்பெற்றிருக்கிறது. முன்னர் கூட இவரின் ஊறுபசி என்ற நாவல் படித்திருக்கிறேன். அது பக்கங்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் ஒரு நாளில் படித்து முடிக்க கூடியதாக இருந்தது. அதில் சம்பத் என்ற கதாபாத்திரம் ஏற்படுத்திய துயரம் பல நாள் வரையில் மனதில் ஓட்டிக்கொண்டு இருந்தது. அதன் பின்னரே சிறுகதைகள் கட்டுரைகள் தாண்டி நாவல்கள் மீதும் … More "யாமம்" ஏற்படுத்திய தாக்கம்