"நாளைய திலகம்" டிரோஷனுக்கு பாராட்டு விழா

பக்கத்தில் இருக்கிற வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிக்க முடியாம, வீட்டுல நித்திர கொள்ளுற ஆக்கள் இருக்கிற இந்த ஊருல, அவசர வேலைகளுக்கும் இடையில போகவர நானூறு கிலோமீட்டர் தூரம் வவுனியாவுக்கு பயணம் செய்து, பெரும்தொகையான பணம் செலவு செய்து, வாக்களித்து விட்டு ஒரே நாளில் திரும்பி வந்த டிரோஷனின் ஜனநாயக உணர்ச்சியை இந்த உலகம் வியந்து பார்க்கிறது. தோத்துப்போன பொன்சேகாவுக்கு அவர் காட்டிய அபரிமிதமான பாசம், கொள்கை மீது அவர் கொண்ட உறுதிப்பாடு என்பன இன்னும் ஏழு … More "நாளைய திலகம்" டிரோஷனுக்கு பாராட்டு விழா

உணர்வு எப்போது தான் ஒற்றுமைப்பட்டு வருமோ?

அன்றாட வாழ்க்கையில மிகவும் வேதனையான ஒன்று, எதாவது ஒன்ற பெறுவதற்காக வரிசையில் நிற்பது அல்லது யாராவது ஒருவருக்காக காத்திருப்பது. அப்படி இருக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் எரிச்சல் தருகின்ற ஒரு அனுபவமாக அமையும். தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒவ்வொருவரும் இலங்கை போன்ற நாட்டில் பல விடயங்களுக்காக வரிசையில் நிண்டு பழக்கப்பட்டு விட்டோம். அது எம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டது. இதிலும் நான் அதிகம் வெறுக்கும் ஒன்று வங்கிகளுக்கு செல்வது, அதும் வெள்ளவத்தையில் உள்ள வங்கிகளுக்கு செல்வது. … More உணர்வு எப்போது தான் ஒற்றுமைப்பட்டு வருமோ?

நலன்புரிமுகாம்களை பார்வையிடும் வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இந்த கதை புரியுமா?

ஒரு ஊர்ல ஒரு பாடசாலை இருந்திச்சாம் , அந்த பாடசாலையில ஒரு டீச்சர் இருந்தாங்களாம். அந்த டீச்சர் ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு வருவாங்களாம் ஆனா பாடம் நடத்த மாட்டங்களாம் … சில நேரம் பசங்களா படிக்க சொல்லி விட்டு டீச்சர் பெஞ்சுல தூங்கிடுவாவாம். பல நேரங்களில் நேற்று நடந்த மெகா சீரியல், கிரிக்கெட் மேட்ச் , சினிமா எண்டு பலதும் பத்தும் பேசியே பொழுத களிப்பவாம். இப்படி இருக்கேக்க அந்த டீசெரை பற்றி அந்த பாடசாலை அதிபருக்கு … More நலன்புரிமுகாம்களை பார்வையிடும் வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இந்த கதை புரியுமா?

காங்கிரஸ் படு தோல்வி, ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு

இப்படி ஒரு செய்திக்காக , ஐந்தாம் கட்ட தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும். தமிழர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இது போன்ற ஒரு செய்தி தான். சோனியா காந்தியும் அவர் காங்கிரஸ் கட்சியும் படு தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதே என் சமீபத்திய விருப்பம். இந்த தேர்தல் கருணாநித்யையும் அவரது அன்னை சோனியாவையும் இருந்த இடம் தெரியாமல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஏற்கனவே கருணாநிதியின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலுடன் ஏறக்குறைய முடித்துவிடும் என்பதில் ஐயமில்லை … More காங்கிரஸ் படு தோல்வி, ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு

மாகாண சபை தேர்தலும் , வாக்களிக்க மறந்த தமிழனும்

இன்று கொழும்பு மாகான சபை தேர்தல், என்னுடைய வாழ்வில் முதல் வாக்கும் கூட இரண்டாயிரத்து நாலில் நடைபெற்ற இதே தேர்தலுக்கானது தான். ஏன் முதலாவது வாக்கில் ஒரு ஆட்டோ காரர் மாநகர மேயராக வந்தார் என்று கதை சொல்வதாயின் ஆகக் குறைந்தது நான்கு பத்தியாவது நான் டைப் அடிக்க வேண்டும். எனவே அதை தவிர்த்து நேரடியாக விடயத்துக்கு வருகிறேன். காலையிலேயே நண்பர் ஒருவருக்கு மெசேஜ் போட்டேன் , அடே வாக்கு போட போனியா எண்டு? இதுக்கு எல்லாம் … More மாகாண சபை தேர்தலும் , வாக்களிக்க மறந்த தமிழனும்

இந்திய அரசின் நடத்தை (attitude) சரி இல்லையாம்: இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கும் புரிந்திருக்கிறது

தன் வினை தன்னைச்சுடும் என்பார்களே , அது போல தான் இந்தியாவின் அணுகு முறை மீண்டும் ஒரு முறை அவர்களையே சுட்டிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடைபெற வேண்டும் என்று நான் அதிக நாள் எதிர்பார்த்து காத்து இருந்தேன். இலங்கை அணி மீது லாகூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போதுஇந்திய ஊடகங்கள் நடந்து கொண்ட விதமும் , தெரிவித்த காட்டமான கருத்துக்களும் இப்போது இந்தியாவிற்குள்ளேயே உள் வீட்டு பிரச்சனையாகி இன்று உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. இந்திய பர்மியர் … More இந்திய அரசின் நடத்தை (attitude) சரி இல்லையாம்: இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கும் புரிந்திருக்கிறது

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் இடி விழுக

பலரும் எதிர்பார்க்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் குறித்தாயிற்று , தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியிருக்கின்றன. இலங்கை தமிழர் பிரச்சனையே தமிழக தேர்தலின் மையப்பொருள் அகி இருக்கிறது. தனது ஓட்டு மொத்த பலத்தையும் திரட்டி , வாக்காளருக்கு பணமாய் இறைத்து திருமங்கலம் இடைத்தேர்தலில் வென்றிருந்தது தி.மு.க . அனாலும் இன்றைய சூழ்நிலையில் இலங்கை தமிழர் விவகாரத்தில் கருணாநித்யின் நடிப்பின் உண்மை முகம் முற்றாக வெளிப்பட்ட நிலையில் இனிமேலும் அந்த விடயத்தை வைத்து எந்தவொரு அரசியல் லாபமும் பெறமுடியாத நிலைக்கு … More தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் இடி விழுக