ஈரான் திரைப்பட விழாவும் இடையில் நின்ற படமும்

“Childrens of heaven”, “The colour of paradise” என்ற மஜித் மஜிடியின் ஈரானிய திரைப்படங்களை பார்த்திருந்ததால் ஈரான் திரைப்படங்கள் மீது எப்போதுமே ஒரு காதல் இருந்ததுண்டு. மனித நேயத்தையும், மனித உறவுகளின் நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை அவை. ஈரான் படங்களின் கலரும், மனிதர்களும், சம்பவங்களும் மூடு பனி, வீடு, முள்ளும் மலரும் போன்ற எண்பதுகளின் பாலு மகேந்திரா, மகேந்திரன் படங்களை ஒத்திருக்கும். எதோ ஒரு அழகுணர்ச்சியும், சோகமும் ஒட்டிக்கொண்டு இருக்கும் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் … More ஈரான் திரைப்பட விழாவும் இடையில் நின்ற படமும்

கூட்டத்தில் நான் தேடிய செவ்வந்திப்பூக்கள்….

பிறந்தது முதலே எம் வாழ்க்கை பல தெரிவுகளின் ஊடாக தான் பயணித்துக்கொண்டு இருக்கிறது. யதார்த்தமாக,  எம்  ரசனைக்கு  ஏற்ப தெரிவுகளை அமைத்துகொள்வதிலே நாம்  அதிகம் நேரம் செலவிடுகிறோம். நாம், எம் வாழ்க்கை என்பதே நாம் சார்ந்த தெரிவுகளின் பிரதி விம்பம்   தான்.   ஆறாவது தடவையாக இருக்கும் என நினைக்கிறேன் , புத்தகத் திருவிழாவுக்கு இந்த முறை நான் செல்வது. வழமை போலேவே இருந்தது கூட்டம், இம்முறை அனைத்தையும் குறுகிய நிலப்பரப்புக்குள் அடக்கியது நிறையவே நெருக்கடியாக இருந்தது. இருந்தும்  பூபாலசிங்கம் புத்தக சாலை, கிழக்கு பதிப்பகம் , சேமமடு புத்தக நிலையம், எக்ஸ்போ கிராபிக்ஸ் நிறுவனங்களில் தேவையானவற்றை வாங்கிகொண்டேன். … More கூட்டத்தில் நான் தேடிய செவ்வந்திப்பூக்கள்….

புறாவே நில்லுன்னு சொன்னேன், கனாவாய் ஓடி மறைந்தாய்……..

புறாவுக்கு தன் தொடையில் ஒரு பகுதியையே வெட்டி அளித்தான் சிபிச்சகரவர்த்தி எண்டு நான்காம் வகுப்பு சமயபாட புத்தகத்தில் காட்சிப்படங்களுடன் படித்திருக்கிறேன். அதன் பின்பு வேறு ஒரு சமயத்தில் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி எண்டும் படித்திருக்கிறேன். அன்றிலிருந்து இந்த சிபியும் , பாரியும் என் நீண்ட கால ஹீரோக்களாகவே இருந்து வந்தார்கள்… இந்த கதையின் நாயகனும் நாயகியும் இரண்டு புறாக்களே ஆனாலும் இங்கு கதை பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு செல்லவில்லை . மாறாக ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் என் … More புறாவே நில்லுன்னு சொன்னேன், கனாவாய் ஓடி மறைந்தாய்……..

ஏன் பதிவு திருடப்பட்டமையில் பெருமை அடைகிறேன்

 நீண்ட காலமாகவே நான் எழுதி வருகிறேன். தொண்ணூறு பதிவுகளுக்கு மேலே எழுதியாகிவிட்டது. ஆனால் முதல்  முறையாக ஏன் பதிவு ஒன்று http://www.infotamil.ச/ என்ற தளத்தினால் நூறு விதிதமும் திருடப்பட்டு , எது வித (reference) சும் தரப்படாமல் வெளியிடப்பட்டதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. இப்போது தான் தரமான எழுத்தாளனாக உயர்ந்திருக்கிறேன் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் எழுதிய “ராஜ் ராஜரட்ணம் கைது, பாதிக்கப்படுமா இலங்கை பங்குச்சந்தை? ” தலைப்பிலான கட்டுரையை பார்த்து நண்பர் ஒருவர் http://www.infotamil.ch/ta/view.php?2eESoC00asgYe2edAA6W3acldAU4d4AYl2cc26oS2d43YOE3a02oMS2e என்ற லிங்கை பின்னுட்டம் இட்டுருந்தார். … More ஏன் பதிவு திருடப்பட்டமையில் பெருமை அடைகிறேன்

இலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா…..பரபரப்பு சம்பவம்

நானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந்து வோட்டுக்களோடு படுத்துவிடுகிறது. சில நேரம் என்னை தவிர வேறு யாரும் வோட்டு போடா மாட்டர்கள். அப்படியான சந்தர்ப்பங்களில் மினக்கெட்டு எழுதின பதிவை நாலு பேர் பார்க்கவில்லையே என்று கடுப்பா இருக்கும். நான் பதிவு எழுதுற நேரத்தைவிட எழுதின பதிவுக்கு ஹிட்ஸ்  கிடைச்சிருக்கா என்று தலையை பிச்சுக்கொண்டு தேடுற நேரம் அதிகம். … More இலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா…..பரபரப்பு சம்பவம்

யார் இந்த அழகான பொண்ணு ? யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..

தொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்கம் பன்னிரண்டு நிமிடங்களை ஆக்கிரமிக்கும் விளம்பரங்களை கண்ணுக்கு குளிர்ச்சியாக , அழகாக காட்டவேண்டிய கட்டாயம் ஒவ்வொரு விளம்பர இயக்குனருக்கும் உண்டு. ஒவ்வொரு தோல்வி அடையும் விளம்பரத்துடனும் , குறித்த விளம்பர சார்ந்த பொருளின் விற்பனையும் தோல்வி அடையும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. சமீப காலமாக அழகான ஒரு மொடல் நிறைய விளம்பரங்களில் தோன்றுகிறார். … More யார் இந்த அழகான பொண்ணு ? யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..

சில நேரங்களில் சில மனிதர்கள்

உலகில் கடினமான ஒன்று உண்டென்றால் அது மனிதர்களையும் அவர்கள்முகங்களையும் புரிந்து கொள்வது தான். நாம் கடந்து வரும் நட்புக்களிலும் உறவுகளிலும் எவ்வளவு போலித்தனம் ஒட்டியிருக்கிறது என்பது சில சமயங்களில் தெரியாமலே போய்விடுகிறது. எவ்வளவு போலியாகவும் , பகட்டாகவும் வாழ்கின்றோம் என்பதை பல சமயங்களில் எம் மனசாட்சி கூட ஏற்றுக்கொள்வதில்லை. திருத்தி கொள்ள அனுமதிப்பதும் இல்லை. மனிதர்கள், பிறர் பற்றிய அறிதல்களிலும் , அவர்கள் தொடர்பான செய்திகளிலும் சம்பவங்களிலும் ஆர்வங்கொண்டு பின் அடிமையாகி பின்னர் அதுவே வாழ்கை என்றாகி … More சில நேரங்களில் சில மனிதர்கள்