ஏன் மனதும் : ஷிரேயாவின் இடையும்

சத்தியமாக எனக்கு ஹைக்கூ எல்லாம் எழுத தெரியாது . என்றாலும் ஏன் பதிவை பார்வை இட வரும் லட்சக்கணக்கான (ellam build up thaan)வாசகர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்ய அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்று தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருந்தேன் … அதில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் ஷிரேயா அடிக்கடி வந்து கொண்டு இருந்தார். ..அதை பார்த்தபோது உள்ளத்தில் பீறிட்டு எழுந்த சில வசனங்கள் இவை. ஒரு வேளை அது ஹைகூவாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம் … More ஏன் மனதும் : ஷிரேயாவின் இடையும்

நவம்பர் 2005 இல் நான் எழுதியது

ஒரு தேசமேதோற்றுப்போய்நீ வெற்றிபெற்றிருக்கிறாய், தொடர்ந்துஅநியாயங்களேவெற்றி பெறுவதுஇங்குமட்டும் தானோ?இன்னுமொருஇருண்ட யுகம்ஆரம்பித்து வைக்கிறாய்கடந்ததைவிட மோசமாக , ஆர்ப்பரிக்கின்றனர்பலர்..உனது அங்கவஸ்திரமேநாளை தூக்குகயிறுஆவது தெரியாமல், மிலோசவிக்கையும்போல்போட்டையும்உன்னில் பார்கிறேன்தன் சொந்ததேசத்து மக்களையேகொன்றோளித்தவர்கள்அவர்கள்….

என்னை மீறிய எண்ணங்கள்

நான்கடந்துவரும்கல்லறைகளில் எல்லாம்எத்தனையோ கதைகள்புதைந்துகிடக்கின்றன, மரங்கள்எல்லாம் என்னைபார்த்து ஏதோதோகடந்தகால சம்பவங்களைசொல்ல நினைப்பதாய்எனக்குப்படுகிறது, நடந்துவரும்சாலைகளில் எல்லாம்எழுதப்படாத எத்தனையோவரலாறுகள்சிதிலமாகிகிடக்கிறது, உருவம் இல்லா ஏதோ ஒரு பயம்,என் மனதின் எங்கோஒரு மூலையில்விஸ்வரூபம் எடுத்துக்கொண்டேஇருக்கிறது…..

சுயநலம்

நான் குழைக்கும்சோற்றில் தெரியுதுவன்னியில் பசியால் வாடும்பிஞ்சு குழந்தையிண்ட முகம்கண்ணீருடன்இருந்தும் குழைத்தே கலைக்கிரன்என்ட ஒருவேளை சுகம்பாதிக்கப்பட கூடாதுஎன்பதற்காக ….. நான் பஞ்சணையில்படுத்துக்கொண்டேயோசிக்கிறன் …..அங்க வேலிகளுக்குள்ளவெறுந்தரையில் படுத்திருக்கும்எண்ட இனம் வெயிலுக்கும்மழைக்கும் என்னசெய்யும்எண்டு ….. எனக்கு நாளைக்குவிடிய எழும்பினாஇந்த உணர்வெல்லாம்மறந்து போம் ,ஆனா நாளையேஒரு கேள்விக்குறியாய்வாழ்ந்து கொண்டிருக்கும்என் சமூகம்பற்றி யோசிக்க கூடஎனக்கு நேரமில்லை…..

வன்முறை வாழ்க்கை

ரத்தம்உறைந்த சாலையில்பிரேதங்களின் மீதுநடப்பதாகவேஒரு உணர்வு. மனிதஎச்சங்கள் எல்லாம்வளமாகிப் போனதால்பூக்களை கூடநெருங்கமுடிவதில்லைபிணவாடை. கல்லறைகளுக்குவைத்தே தேசத்தின்மலர்கள் தீர்ந்து விட்டதால்விற்பனைக்கெல்லாம்இப்போது பிளாஸ்டிக்கில்.துப்பாக்கி தோட்டாக்களில் கணிதம் படிக்கும் அந்த அழகுச் சிறுவன் நாளைஎன்னவாவான் ?இந்த இடுகாட்டுப்பூமியில்நாளை பிறக்கும்குழந்தைக்கும்கந்தக ஆயுதம்தயாராகிவிட்டது.கதந்து போகின்றனநாட்கள்என்று தீரும்இந்தவன்முறை வாழ்க்கை ?