தமிழர்களே ! தமிழர்களே! நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் ?

கருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற  பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற  போன்ற செய்தி ஆனந்தம் அளித்திருக்கும் என்றே  நம்புகிறேன்.  இரண்டு  வருடங்களுக்கு முதல் இருக்கும்,  இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த நேரம், தமிழக எம்பீக்கள் எல்லாம் இராஜினாமா செய்வதாக அறிவித்தார் கருணாநிதி, பின்னர் அவரது அன்னை சோனியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த நாடகம் முடிவுக்கு வந்தது. பின்னர் ஒரு நாள், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருக்க அண்ணா சமாதிக்கு வந்தார் கருணாநிதி, பகல் வேளை வரை  காத்துப்பட இருந்து விட்டு சென்று விட்டார், பின்னர்  கலைஞர் தொலைக்காட்சி இப்படி அறிவித்தது, ” கலைஞர் உண்ணாவிரதம், போர் நிறுத்தம் அறிவித்தது ராஜபக்சா  அரசு ”  வெறுப்பாக இருந்தது, கோபமாய் வந்தது. நான்கு லச்சம் மக்களின் அவலம் இது போன்ற பச்சோந்தி தமிழ் அரசியல் வாதிகளால் திசை திருப்ப படுகிறதே என்று, அந்த சம்பவங்களின் பின்னரே எம் மக்கள் மீதான ஒட்டு மொத்த பரிதாபமும் நடந்து முடிந்தது.  முன்பெல்லாம், கருணாநிதி மீது நிறைய மதிப்பு இருந்தது, அவரின் உழைப்பும் தமிழ் ஆற்றலும் அபரிமிதமானது, அனால் அன்றிலிருந்து நான் அதிகம் வெறுக்கும் மனிதராக கருணாநிதியும் காங்கிரஸ் கட்சியும்  மாறியது.    அவரும் காங்கிரஸ் கட்சியும்    படு தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதே என் சமீப கால  விருப்பமாக இருந்தது. . அந்த விருப்பம் இந்த தேர்தல் மூலம் நிறைவேறி … More தமிழர்களே ! தமிழர்களே! நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் ?

இது ஒரு இந்திய எதிர்ப்பு பதிவு

இந்தியர்களுக்கு , அதிலும் குறிப்பாக வட இந்தியர்களுக்கு ஒரு கர்வம் இருக்கிறது. தாங்கள் வானத்தில் இருந்து வந்ததாய் இறுமாப்பு கொண்டிருப்பார்கள். தங்களை அனைவரும் தலையில் வைத்து கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தங்கள் நாடு தொடர்பாக யாருக்கும் இல்லாத பற்று தங்களுக்கு உண்டு எனக்காட்டி கொள்வார்கள். ஓட்டு மொத்த இந்தியாவும் தங்களால் தான் பிரதிநிதித்துவ படுகிறது என்று உலகத்துக்கு கதை சொல்வார்கள். அப்துல் கலாமுக்கு அமெரிக்காவுக்கு சொந்தமான விமான சேவை ஒன்றில் செல்லும் போது, அவர் குடியரசு … More இது ஒரு இந்திய எதிர்ப்பு பதிவு

எழுநூறு மில்லியன் பேர் பயன்படுத்தும் சுஜாதா உள்ளிட்ட குழுவினரின் கண்டுபிடிப்பு.

முன்பு எல்லாம் தேர்தல் நடந்து அதன் முடிவுகள் வர வாரங்கள் கூட சென்றிருக்கலாம் . ஆனால் இன்று தேர்தல் சார்ந்த அனைத்து வாக்குப்பதிவுகளும் கணணி மயப்படுத்த பட்டு விட்டது. வாக்கு பதிவு இயந்திரத்தின் துணையுடன் வாக்கு கணக்கிட தொடங்கி மூன்று மணி நேரத்திலேயே மொத்த முடிவுகளும் வந்து , யார் பிரதமர், முதலமைச்சர் , எந்த தொகுதியில் யாருக்கு கூடிய வாக்குகள் என்ன்பதெல்லாம் சில நிமிடங்களிலேயே தெரிந்து விடுகிறது. இந்தியா போன்ற மிக பெரிய ஜனநாயக நாட்டுக்கு … More எழுநூறு மில்லியன் பேர் பயன்படுத்தும் சுஜாதா உள்ளிட்ட குழுவினரின் கண்டுபிடிப்பு.

இந்திய அரசின் நடத்தை (attitude) சரி இல்லையாம்: இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கும் புரிந்திருக்கிறது

தன் வினை தன்னைச்சுடும் என்பார்களே , அது போல தான் இந்தியாவின் அணுகு முறை மீண்டும் ஒரு முறை அவர்களையே சுட்டிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடைபெற வேண்டும் என்று நான் அதிக நாள் எதிர்பார்த்து காத்து இருந்தேன். இலங்கை அணி மீது லாகூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போதுஇந்திய ஊடகங்கள் நடந்து கொண்ட விதமும் , தெரிவித்த காட்டமான கருத்துக்களும் இப்போது இந்தியாவிற்குள்ளேயே உள் வீட்டு பிரச்சனையாகி இன்று உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. இந்திய பர்மியர் … More இந்திய அரசின் நடத்தை (attitude) சரி இல்லையாம்: இப்போது கிரிக்கெட் வாரியத்துக்கும் புரிந்திருக்கிறது

Slumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி

இந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ.ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றியும் , அவர் இசை அமைத்த Slumdog millionire பற்றியுமான அதிகபடியான தேடல்கள். 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தப் படம், குறைந்தது 8 விருதுகளையாவது அள்ளிவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த அளவு தரத்துடன் வேறு படங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த கோல்டன் க்ளோப் விருது விழாவில் இப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான … More Slumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி