ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 3

நீண்ட காலமாகவே எழுதவில்லை,  அண்மையில் எழுதிய பதிவுகள்  எல்லாம் மொக்கையாக இருப்பதாகவே உள்ளுணர்வு சொல்லுகிறது. . நண்பர்களிடமும் கேட்டுப்பார்த்தேன், எதுவும்  சொல்லவில்லை , பேஸ் புக்கிலும் ஒன்றிரண்டு பேரே லைக் பண்ணி இருந்தனர். அனால் தனது முயற்சியில் சற்றும்  மனம் தளராத விக்கிரமாதித்தன் , பழைய பதிவுகளின் ரிதத்துக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் இந்திய பயணம் தொடர்பான மூன்றாவது மொக்கை பதிவை ஆரம்பிக்கின்றான். தேனியில்இருந்து திருச்சிக்கான நெடுஞ்சாலை அழகானது, தமிழ்நாட்டின் பசுமையான பக்கம் இந்தப்பக்கங்களில் தான் பார்க்க முடிகிறது. இரு மருங்கிலும் வயல்களும் தோட்டங்களும் , அழகாய் இருந்தது. வாகனத்தை நிறுத்தி வயல்களில்களும் தோட்டங்களிலும் புகுந்து கொண்டோம். மாலையில் உச்சிப்பிள்ளையார் , இந்தியாவின் மிகப்பெரிய யவுளியகம் சராதாஸ், மங்கள் அண்ட் மங்கள் என்று திருச்சி வீதிகளில் சுற்றியலைந்து விட்டு அடுத்த நாள் காலை ஸ்ரீ ரங்கம் கிளம்பினோம். திருச்சியில் அழகு கர்நாடகத்தின் கைகளில் உள்ளது. காவிரியில் தண்ணீர்  வேண்டும் பல காலங்களுக்கு முன்னால் ஆர்பாட்டம் செய்தவர்கள் , நதி நீர் இணைப்பு பற்றி பேசியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை போராடி பெறமுடியாத தலைவர்களை   எல்லாம் நாம் உலக … More ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 3

ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 2

மதுரை நோக்கி போகிறேன்… தொடரும்…என்று முடித்திருந்தேன் கடந்த பதிவை, ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு மூன்று மணி நேரத்தில் மதுரை வருகிறது, டிரைவர் பெரியசாமி இளையராஜா பாடல்களை ஓடவிட்டது இரண்டாயிரம் கிலோமீட்டர் நீளமான எமது தமிழ் நாட்டு பயணம் இளையராஜாவின்  காதல், சோக  பாடல்களுடனேயே கடந்துபோனது ஒரு சுகனுபவம் . ( டிரைவர் பெரியசாமி பற்றியும் அந்த பாடல்களுக்கு பின்னால் இருக்கிற அவனின் காதல் கதை பற்றியும்  அடுத்த அடுத்த  பதிவுகளில் பார்ப்போம்.) மதுரை எதோ பிடித்திருந்தது, அழகு என்று இல்லாவிட்டாலும், பரபரப்பான நகரம், சுறுசுறுப்பாக இயங்கிகொண்டு இருந்தது.  தமிழகத்தின் கலாச்சார நகரம், தூங்கா நகரம் எண்டு சொன்னார்கள் , இரவு பதினோரு மணி அளவில் வீதிக்கு வந்து பார்த்தேன் , உண்மை தான். இந்தியாவில் படம் பார்ப்பது நல்ல ஒரு அனுபவம் , அது பார்த்தால் தான் புரியும் , சூப்பராய் இருக்கும் என்று யாரோ சொல்லி இருந்தார்கள் , மதுரையில் தூங்கா நகரம் பார்க்க வேண்டும் என்று நானும் டிரோஷனும் பிளான் போட்டோம் , ஆனால் முடியாமல் போய்விட்டது. பின் சத்தியமில் “யுத்தம் செய்” பார்த்த கதை பெரிய சாமியின் கதையோடு அடுத்த எபிசோட்டில் வருகிறது.   மீனாட்சி அம்மன் கோவில் போனோம் , கலை மற்றும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்ந்து நிற்கிறது கோயில். அம்மனை தரிசிக்க வரிசையில் நின்ற பொது , ஒரு வயசான பெரியவரிடம் பேச்சு கொடுத்தேன். . மதுரை பக்கம் ஊராம் , விவசாயம் பார்ப்பவராம்.. நான் சிலோனில் இருந்து வந்திருப்பதாக அவர் கேட்டு நான் சொன்னேன், பஸ்லையா வந்தீக … More ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 2