நூற்றிஎண்பது ( சிர்த்தார்த் + இரண்டு)

சித்தார்த்த பார்த்து எத்தனை வருசமாச்சு, கடைசியா ஆயுத எழுத்துல பார்த்தது, ரெண்டே படம் தான் தமிழ்ல நடிச்சிருந்தாலும், இரண்டுமே மனசுல நிக்குது. ஜெனிலியாவுக்காக எகிறி குத்திச்சும்  , திரிசாவுக்காக நெஞ்சம் எல்லாம் காதல் சுமந்ததால.. அந்தகால ஜெமினி கணேஷன் மாதிரி ஒரு காதல் ஹீரோவா  ஒரு ரவுண்டு வருவார் எண்டு பார்த்தா,  காணாமலே போய்,  எட்டு வருஷம் கழிச்சு திரும்ப வந்திருக்கார்,  எண்டதால சும்மா ஒருக்கா போய் பார்த்த படம் தான் நூற்றிஎண்பது.   யாரோ சொன்னார்கள், இந்தியாவில் சினிமா பார்ப்பது சூப்பராய் இருக்குமென்று, சில மாதங்களுக்கு முன்னால் சென்னைக்கு சென்றபோது சததியமில் யுத்தம் செய் பார்த்தோம். அட்டகாசமாய் இருந்தது, மிக பிரமாண்டமாய்  இருந்தது … More நூற்றிஎண்பது ( சிர்த்தார்த் + இரண்டு)

விண்ணை தாண்டும் அளவுக்கு எதுவுமில்லை ….

“உலகத்தில் இத்தனை பொண்ணுங்க இருக்கும்போது ஏண்டா எந்தப் பொண்ணு மேலும் எனக்கு காதல் வரமாட்டேங்குது? “ “நானும் ஒரு பிளட்டுல தான் இருக்கேன், ஏன் எங்க வீட்டு  மாடியில மட்டும் ஜெசி என்ற கிறிச்டயன்ட்  பொண்ணு இல்ல, ஒரு இந்து பொண்ணு, ஒரு சிங்கள பொண்ணு கூட குடி வர மாட்டேங்குது”. Msc Maths படிச்ச ஒரு த்ரிஷா வேணாம், Atleast  ஒரு A/L படிக்கிற figure  ஆவது இருந்திருக்கலாம் இல்ல. ஏன் இப்படி எல்லாம் நடக்க மாட்டேங்குது, ஏன் எங்க ரோட்டுல மட்டும் எந்த பொண்ணும் அழகா சாரி உடுத்து … More விண்ணை தாண்டும் அளவுக்கு எதுவுமில்லை ….

அளிமங்கட (The road to elephant pass)

முதன் முதலாக இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் இந்த படத்தின் போஸ்டரை பல மாதங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.  அன்றிலிருந்து, அப்படி இந்த படத்தில் என்ன தான் இருக்கு? என்று பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருந்தது. வழமை போலவே ஒரு பிரச்சார படமாகவும் , தமிழனை கேவலமாகவும் சித்தரித்து இருப்பார்கள் என்ற எண்ணமே படம் பார்க்கும் வரை இருந்தது. நான் வேலை செய்யும் இடத்தில் பலரும் இந்த படத்தை சிலாகித்து பேசியதாலும் , சந்திரன் ரத்னம் என்ற பெயருடை ஒருவர் தயாரித்து இயக்கி  இருந்ததாலும் எப்படியும் பார்த்துவிட வேண்டும் எண்டு  முடிவெடுத்து  நண்பர்களிடம் கேட்கலாம் என்றால், … More அளிமங்கட (The road to elephant pass)

ஸ்ரேயா நடித்த "சுப்புலக்ஸ்மி" திரைப்பட விமர்சனம்

ஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் கண்டபாட்டுக்கு அடித்து நோருக்கியிருந்தனர். நான் நேற்று தான் படம் பார்த்ததால் இனியும் கந்தசாமிய விமர்சிக்கிறது மனிதாபிமானம் இல்லை. அந்த மனுசனை எத்தனை பேரு தான் தாக்குவீர்கள். பாவம் ஒருவன் தோத்துப்போனா ஏறி மித்திக்கிறது தான் தமிழர் பண்பாடா ? இதுவரை குறித்த ஹீரோ எத்தனையோ படங்களில் எம்மை மகிழ்வித்து இருப்பதால் அவருக்கு போது … More ஸ்ரேயா நடித்த "சுப்புலக்ஸ்மி" திரைப்பட விமர்சனம்

சில நேரங்களில் சில மனிதர்கள்

உலகில் கடினமான ஒன்று உண்டென்றால் அது மனிதர்களையும் அவர்கள்முகங்களையும் புரிந்து கொள்வது தான். நாம் கடந்து வரும் நட்புக்களிலும் உறவுகளிலும் எவ்வளவு போலித்தனம் ஒட்டியிருக்கிறது என்பது சில சமயங்களில் தெரியாமலே போய்விடுகிறது. எவ்வளவு போலியாகவும் , பகட்டாகவும் வாழ்கின்றோம் என்பதை பல சமயங்களில் எம் மனசாட்சி கூட ஏற்றுக்கொள்வதில்லை. திருத்தி கொள்ள அனுமதிப்பதும் இல்லை. மனிதர்கள், பிறர் பற்றிய அறிதல்களிலும் , அவர்கள் தொடர்பான செய்திகளிலும் சம்பவங்களிலும் ஆர்வங்கொண்டு பின் அடிமையாகி பின்னர் அதுவே வாழ்கை என்றாகி … More சில நேரங்களில் சில மனிதர்கள்

இப்போதாவது Slumdog Millionaire பார்த்து விட்டீர்களா?

இந்த படத்துக்கு அஸ்கர் கிடைப்பதற்கு ஒன்றரை மாதத்திற்கு முன் நான் எழுதிய விமர்சனம் இது. தமிலிஷ் இணையதளத்தில் பதின்எழு வோட்டுக்கள் உள்ளடங்கலாக என்னையும் ஒரு பதிவராக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வரவேற்பை பெற்ற பதிவு இது. அன்று நான் எழுதும் போதுபலபேர் இந்த படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் . இன்று பல மொழிகளிலும் வெளியாகி பலரும் பார்த்திருப்பார்கள் என்ற அடிப்படையில் மீண்டும் பிரசுரம் செய்கிறேன். “”இந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ.ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு … More இப்போதாவது Slumdog Millionaire பார்த்து விட்டீர்களா?

சுஜாதாவின் பெயரால் ஒரு கோர தாண்டவம்

சுஜாதா என்ற காலத்தால் அழியாதா அந்தப் பெயர் , தம்மானா, ருக்மணி என்று இரண்டு அழகான ஹீரோஇன் போன்ற ஒரு சில காரணங்கள் மட்டுமே அதிகம் நேர்மாறான விமரிசிக்கப்பட்ட இந்தப் படத்தை பார்க்கத்தூண்டியது. ஏற்கனவே படம் எதிர்பார்ப்புக்களை சற்றும் பூர்த்தி செய்யவில்லை என்ற வகையிலான விமர்சனங்கள் நிறையவே வந்திருந்தன. அறிமுகமான காலம் முதலே தம்மன்ன மீது ஒரோ பெரிய ஈடுபாடு . அனால் ஆனந்த தாண்டவம் பார்த்தபிறகு நிறையவே குறைந்துவிட்டிருக்கிறது. ருக்மணி தனித்து தெரிகிறார். பாரதிராஜா அறிமுகம் … More சுஜாதாவின் பெயரால் ஒரு கோர தாண்டவம்