நூற்றிஎண்பது ( சிர்த்தார்த் + இரண்டு)

சித்தார்த்த பார்த்து எத்தனை வருசமாச்சு, கடைசியா ஆயுத எழுத்துல பார்த்தது, ரெண்டே படம் தான் தமிழ்ல நடிச்சிருந்தாலும், இரண்டுமே மனசுல நிக்குது. ஜெனிலியாவுக்காக எகிறி குத்திச்சும்  , திரிசாவுக்காக நெஞ்சம் எல்லாம் காதல் சுமந்ததால.. அந்தகால ஜெமினி கணேஷன் மாதிரி ஒரு காதல் ஹீரோவா  ஒரு ரவுண்டு வருவார் எண்டு பார்த்தா,  காணாமலே போய்,  எட்டு வருஷம் கழிச்சு திரும்ப வந்திருக்கார்,  எண்டதால சும்மா ஒருக்கா போய் பார்த்த படம் தான் நூற்றிஎண்பது.

 

யாரோ சொன்னார்கள், இந்தியாவில் சினிமா பார்ப்பது சூப்பராய் இருக்குமென்று, சில மாதங்களுக்கு முன்னால் சென்னைக்கு சென்றபோது சததியமில் யுத்தம் செய் பார்த்தோம். அட்டகாசமாய் இருந்தது, மிக பிரமாண்டமாய்  இருந்தது சத்யம் திரையரங்கு. அப்போது காட்டினார்கள் சத்யம் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று. அவர்கள் எடுக்கும் படமும் பிரமாண்டமாய் இருக்கும் , பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
கதை, மிகச் சாதரணமான ஒரு முக்கோண காதல் தான். அதை சிறப்பான படத்தொகுப்பு மூலமும், அழகான இரண்டு கதா நாயகிகள் மூலமும் தாங்கி பிடித்திருக்கிறார்கள்.
பழைய  கண்ணதாசன் பாடல் ஒன்றில் இப்படி ஒரு வரி வரும்..
“கண்கள் தீட்டும் காதல் என்பது, கண்ணில் நீரை வரவழைப்பது..  
பெண்கள் காட்டும் அன்பு என்பது, நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது.”
அப்படி இரண்டு பெண்களின் அன்பில்  மாட்டிக்கொண்ட சிர்த்தார்தின் நிலை தான் இந்த படத்தின் ஒன்லைன்.
அழகாக வர்ணிககப்படும் கதாபாத்திரங்கள், அன்பான வெளிப்படுத்தல்கள்..போலித்தனம் இல்லாத சம்பவங்கள் ,  நீண்ட காலத்துக்கு பிறகு பார்த்தா சண்டையே இல்லாத  படம் என்பது போன்ற சில பல காரணங்கள்,  எனக்கு படம் பிடித்திருக்க போதுமானதாக இருந்தது..

ஆனால் எனக்கு முன் வரிசையில்  இருந்த ஒரு பெரிய செட் , அந்த படத்துக்கு போகலாம் என்று கூட்டி வந்த நண்பனை கேட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டு இருந்தார்கள். ஒரு வேளை அஜித் , விஜய் படம் பார்த்து பழகியவர்களோ என்று நினைத்துக்கொண்டேன்.

மனசில பட்டத்தை அழகுணர்ச்சியோடு செய்யும் ஹீரோ, போடோ கிராபர் ஆன ஒரு ஹீரோயின், அன்பை மட்டுமே காட்டும் இன்னொரு ஹீரோயின் என்று ரசிப்பதற்கு விடயங்கள் இருக்கிறது.
இந்த படத்தில் நான் ரசித்த இன்னொரு விஷயம், பின்னணி குரல்,  சில நடிகர்களின் குரலில் எதோ அழுத்தம் இருக்கும், சிர்தார்தின் குரலிலும் எதோ ஒரு attactive factor இருக்குது.  நித்யா மேனன் குறும்பாய் , அழகாய் இருக்கிறார். .. அவருக்கு பின்னணி குரல் கொடுத்ததும் , ஆயுத எழுத்தில் Isha deol  கு குரல் கொடுத்ததும் ஒருவராய் இருக்க வேண்டும்..அப்படி ஒரு அழகான பேச்சு. 
ப்ரியா ஆனந்த்.. நன்றாகவே நடிப்பு வருகிறது, நிறையவே “Glamour” ஆகவும் இருப்பதால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்றே நினைக்கிறேன். . ஹீரோயின்கள் தொடர்பான என் எதிர்வு  கூறல்கள் பல நேரங்களில் சரியாகவே இருந்திருக்கிறது. 

மதராச பட்டணத்தில் நடித்த எமி ஜாக்சன் பொண்ணு, ஒரு ரவுண்டு வரும் எண்டு சொன்னேன், விண்ணை தாண்டி வருவையா ஹிந்தியில் திரிஷா நடித்த ரோலில்  அந்த பொண்ணு நடிப்பதாக கேள்வி.  (கிளிக் to Read )

பல விளம்பரங்களில் வரும் திவ்யா பரமேஷ்வர் என்ற பொண்ணு அழகா இருக்குதே எண்டு எண்ட ப்லொக்கில் புலம்பி இருந்தேன். அதை பார்த்து யாரோ பொன்னர் சங்கரில் ஹீரோயின் ஆக்கி இருந்தனர். .. (கிளிக் to Read )

அடுத்து படத்தில், இசையும் பாடல்கள் பற்றியும் குறிப்பிட்டு சொல்வதற்கு எதுவுமில்லை. பின்னணி இசை ஓரளவு ரசிக்கும் படியாக இருந்தது.  மற்றும் படத்தில் சித்தார்த்,   ப்ரியா ஆனந்த் அணியும் “costume”   அழகு. நிறையவே மினேக்கேட்டு Rich ஆக காட்டி இருந்தார்கள்.
மொத்தத்தில் தொய்வான கதை, தூக்கல் இல்லாத இசை என்று சில குறை பாடுகள் இருந்தாலும் … பொழுது போக, சந்தோசமாய்  பார்க்க கூடிய படம் இந்த நூற்றிஎண்பது.   
பிற சினிமா பதிவுகள்

Advertisements

One thought on “நூற்றிஎண்பது ( சிர்த்தார்த் + இரண்டு)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s