மது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்

மிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக  விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி சற்றே நேர்த்தியற்றதாக  இருந்தாலும்,  பின்னர் நடந்த நிகழ்ச்சிகள்  சிறப்பாக  இருந்தது. 
பல்கலைக்கழக விழாக்களும் ” கோம்மேர்சியல்” நோக்கத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதே என் கருத்து. அந்த வகையில் இந்த விழா அந்த நோக்கத்தை சற்றே எட்டியிருக்கிறது என்பது தொடர்பான மகிழ்ச்சி .     

இன்றைய தேதியில், ஒரு விழாவுக்கு வருகின்ற ரசிகனை, முழு நேரமும் நிகழ்ச்சிகளிநூடக திருப்பதிப்படுத்த வேண்டிய தேவை கட்டாயமானது. இல்லாவிட்டால் கடந்த சில கழக விழாக்களை போல தொடர்புடைய மாணவர்கள் தவிர எவரும் இது போன்ற  நிகழ்சிகளை பொறுமையுடன் பார்க்க வரமாட்டார்கள்.

கடந்த காலத்தில்,  இது போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு முன் நின்று உழைத்தவன் என்கிற அனுபவத்தில்,  இம் முறை நிகழ்விலும் சில விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம், 
  1. சில பல சிற்றுரைகள் (சிறப்பு அதிதி, உப வேந்தர் போன்றவர்களின்)
  2. நிகழ்ச்சிகளுக்கிடையே நீண்ட இடைவெளிகள்  
  3. ரசிகர்களின் கவனத்தை சற்றும் ஈர்க்காத வாத்திய கருவி / வாய்ப்பாட்டு நிகழ்சிகள் ( அப்படி ஒரு நிகழ்ச்சி இம்முறை   நடை பெற்றது, அதை கொஞ்சம் “fution” போல் நடாத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கம். 
  4. பார்க்க வந்த கூட்டத்துக்கான சிற்றுண்டி தேவையே இல்லாத ஒன்று/ வீண் செலவு
  5. புத்தக வெளியீடுகள் / பரிசளிப்பு விழாக்கள்/ கெளரவிப்புகள் (நிகழ்சிகளின் தொடக்கத்திலே வைத்து விடலாம்) 5 .30 தொடக்கம் 7 .30  வரையான பீக் ஹவரில் கூடவே கூடாது.
இம் முறை நிறைவை தந்த சில விடயங்கள்
  1. இளைய சமூகத்தை கவரக்கூடிய சிறப்பு விருந்தினர். ( பா. விஜய் காகத்தான் கூட்டம் கடைசி வரை இருந்தது, கவிதை மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டது மேலுமொரு போனஸ்.
  2. பொறுமையை சோதிக்கும் அனிமேசன்கள் இல்லாமை  ( வழமையாக UCSC  தான் இந்த கொடுமையை செய்யும் )
  3. நிகழ்வுகளை பெரிதாக காட்டிய LED  ஸ்க்ரீன் . பெரும்பாலனவர்கள் இதை தான் பார்த்தார்கள் .
  4. ஒரே வகையான நிகழ்ச்சிகளை தவிர்த்தமை ( வழமையாக எல்லோருமே நாடகம் தான் போடுவார்கள் )
  5. அதிகம் அறுக்காத நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் 
கவியரங்கம் அருமை, Chreshan நின் காதல் கவிதைகளை பிளாக்கில் வாசித்ததுண்டு, அப்படி ஒரு அழகுணர்ச்சி, வாசிக்கும் பொது எழுதவேண்டும் போல் இருக்கிறது எனக்கும்.  கவிதைகளிலான பதிவொன்று  எழுத நீண்ட நாளாய் ஆசை ஆனாலும் எதோ தடுமாற்றம். Chreshan நின் கவிதை  கேட்க இறுதிவரை காத்து இருந்தேன், ஆனால் Chreshan னுக்கு காதல் மறந்து  வீரம் வந்ததில் ஏமாற்றமே.  நடுவில் வந்த கிராமிய நடனம் அருமை , பாடல்களின் தெரிவும்  கோர்த்த விதமுமே அதன் success.

இனி விசயத்துக்கு வருவோம், நான் இந்த நிகழ்ச்சி பார்க்க வேண்டும் என்று நிறைய நாளாவே காத்திருந்தேன். காரணம் எங்கள் பாசத்துக்குரிய தம்பி, எழுச்சி நாயகன்,  இயக்குனர்  மது சங்கர் குறும்படம் எடுக்கிற செய்தி நிறைய நாட்களுக்கு முன்னதாகவே கசிந்திருந்தது.
மதுவிட்ட  ஒரு பெரிய கலை ஆர்வம் இருக்கு என்றது தெரியும், ஆனா Assistant Director எல்லாம் வச்சு  குறும்படம் எடுக்கிற அளவுக்கு பெரிய இயக்குனராக மது வருவான் எண்டு நான் எதிர் பார்க்கல.
மது சங்கர் கம்பஸ்  வந்த ஆரம்ப காலங்கள் இன்னும் நினைவில நிக்குது.  அந்த காலத்து மது தியாகராய பாகவதர் மாதிரி முடி வளர்த்திருந்தான்.  அந்த பாழாய் போன தலை முடியை ஆட்டி ஆட்டி மது டயலாக் பேசும் போது  பொம்புளை புள்ளைகள் எல்லாம் எழும்பி நிண்டு கை தட்டுங்கள் . 
ஒருவேளை தண்ட அழகில மயங்கித்தான் அவங்க  “cheer” பண்ணுறாங்கள் எண்டு தப்பா  நினைத்து,  மது சங்கர் இயக்குனர் ஆகாமல் ஹீரோ ஆகிடுவானோ எண்டு கூட நாங்க பயந்தம். ஆனா அவன் சரியான பாதையை தேர்ந்தெடுத்து இன்றைக்கு பெரிய இயக்குனாராகி இருப்பது எங்களுக்கு பெரிய சந்தோசம் , ஏன் எண்டால் நாங்க மது சங்கர் எல்லாம் ஒரே கூத்துப் பட்டறையில் வளர்ந்தவர்கள்.   

சில வருடங்களுக்கு முன்னர் எண்ட வீட்ட வந்த மது , ” திரைக்கதை எழுதுவது எப்படி” என்ற சுஜாதாவின் புத்தகத்தை தூக்கி கொண்டு போய்ட்டான் . இன்னும் கொண்டு வந்து தரவில்லை என்பது உபரி தகவல்.  அவன்ட குறும்படத்தில் வைத்த “twist” களும் “symbols” களும் அந்த புத்தகத்தை அவன் பிரித்து மெய்ந்திருக்கிறான் என்பதற்கான சாட்சி.  இந்தளவு “refer” பண்ணி குறும்  படம்  எடுத்த  மது   கவுதம் மேனன் போல கொஞ்சம்  இமிட்டேட் பண்ணினது சங்கடமாய் இருந்தது. ஆனாலும் குறும் படங்களுக்கு ” Voice Over” தவிர்க்க முடியாதது  நியாயமே.
எங்க டிரோஷன், தமிழ் ராஜன்  மாதிரி ஆக்களும் நடிக்கிறதில, ஓவர் Act பண்ணி படத்த கெடுத்துடுவான்களோ எண்டு நான் பயன்திருந்தனான் . டிரோஷன்  ஐம்பது ரூவாக்கு நடிக்க சொன்னா ஐயாயிரம் ரூபாவுக்கு நடிக்கிரவன். நல்ல  வேளை மேடை நாடகத்துக்கு மட்டும் தான் கொஞ்சம் ஓவர் அக்டிங் தேவை என்பதை புரிஞ்சு அளவா தரமா குடுத்திருந்தாங்க.
 ஹீரோவா ரொஷான  செலக்ட் பண்ணிய இடத்திலிருந்தே மதுட வெற்றி உறுதி செய்யப்படுகிறது. அங்க தான் இயக்குனரா உயர்ந்து நிக்கிறான் மது.  எனக்கு கம்பஸ்ல  ஏறக்குறைய எங்கட  ஆக்கள்   எல்லோரையும் தெரியும், ஆன இப்படி “close up” காட்சிகளுக்கு   பொருத்தமா charm ஆன  ஹீரோ quality யோட  ரொஷான தவிர  வேற யாரையும் யோசிக்க முடியல.  ஒரு வேளை “Jesh” பொருந்தலாம். நல்ல வேளை டிரோஷன ஹீரோவா போடததால LED Screen உடையாம தப்பிருச்சு.

அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாத தரமான  நடிப்பு ரோஷனுடையது. அனாலும் குரலில் கொஞ்சம் தெளிவின்மை இருந்தது. பத்து நிமிடமே ஓடும் படத்தில் மற்றைய காதாபாத்திரங்கள் வந்து போகின்றவை தான். அனாலும் டிரோஷன் , தமிழ் ராஜன்,   கலை பிரியா , கலை வாணி ஆகியோருடைய நடிப்பு குறிப்பிடும் படியாக இருந்தது.   வயதான பாத்திரங்களில் “Make -Up” இல் கொஞ்சம் மினக்கிட்டு இருக்கலாம். அந்த விடயத்தில் எந்த கதாபாத்திரமும் கவனம் எடுத்ததாக தெரியவில்லை.
கேமரா அங்கிளில் பின்வரும் இடங்களில் கொஞ்சம் இடிக்கிறது, 
  1. ஹீரோ அறிமுகமாகும் இடம்.
  2. ஒரே அங்கிளில் இரண்டு நிமிடம் ஓடும் தண்ணி அடிக்கும் காட்சி
  3. twist வைத்த இடத்தில் ஓவராய் “zoom” ஆகும் கமெரா
  4. பக்கவாட்டில் காட்டும் நிறைய இடங்கள்  
அனுபவம் இன்மை தெரிகிறது. ஆனலும்  தனித்த முயற்சி எதிர் பார்த்ததை விட நன்றாக இருக்கிறது.  
டிரோஷனுக்கும், ஹீரோயினுக்கும் (?) இன்னும் கொஞ்சம் “close up” காட்சிகள் வைத்திருக்கலாம்.  தெரிந்தெடுத்த “location”    கள் குளுமையே.   
செல் போன் சிணுங்கல்களுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு. வெற்றுப் போத்தல் உருளுதல், ரோஜாப்பூவை “Zoom” செய்து தொடக்கி, கேமரா விரிகையில் நகரும்/தெளியும்   கதை முடிச்சு  , தேவையான இடங்களில் வரும் “Fade effect”   ” repeated seens” தரமான படத்தொகுப்பினை காட்டி நிற்கிறது.  தனித்தே தெரிகிறது ” எடிட்டிங் , டப்பிங் போன்றவற்றின் நேர்த்தி.
 மதுவின் அந்த கன்னி முயற்சியை நிறையவே  பாராட்ட வேண்டும் , படம் ஓடிக்கொண்டு இருக்கும் போது மது சங்கரை பார்த்தேன்.  பதட்டத்துடன் நின்று பாத்துக்கொண்டு நின்றான் . அதில் ஒரு ஏக்கம் தெரிந்தது ,  அரங்கு நிறைந்த மக்கள் இருந்து அவன் படத்தை பார்ப்பது   நிறைவை தந்திருக்கும் என்று நினைக்கிறேன்,

அண்மையில் நடந்த கலை விழா நினைவுக்கு வந்தது. 

மது சங்கர்   நாடகம் போட்டான்.  அவனது நாடகம் மேடை ஏறும் நேரம் தாமதமாகி கொண்டே வந்தது. குட்டி போட்ட பூனை அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான்.  அவன் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தது.  மது,  பரிசு பெறும் ஸ்கூல் பிள்ளைகளை பிடிச்சு வச்சிருக்கம், உன்ட நாடகத்தை   பார்க்க அவன்களாச்சு இருப்பாங்கள் மச்சான் எண்டு யாரோ அறுதல் சொன்னார்கள். அதையும் நகைச்சுவையாகவே  எடுத்துகொண்டான்.

அவனது நாடகம் மேடை ஏறியபோது எட்டு மணி தாண்டி இருந்தது, எண்ணி ஒரு நூறு பேரே ஹாலில் இருந்தனர்.  அண்டைக்கு வலிச்சிருக்கும்  அவனுக்கு, ஆனா  வலி தாங்கிற உள்ளத்தால தானே ஜெயிக்கவும் முடியும்.       

2 thoughts on “மது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்

  1. பாராட்டுக்கள் இன்னும் அதிகமா செய்யோணும் எண்டு தூண்டுது அண்ணா ..
    ஒரு நள்ளிரவில் ரெண்டு கிழமை plan , கதை, நடிகர்கள் , location , வசனங்கள் , எல்லாம் மாத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை,ஒரு இரவில எல்லாத்தையும் மாத்தி எழுதி ஒரு நாள்ல எடுத்து முடிச்சம்.
    அவசரத்தில எழுதினதோ/ எடுத்ததோ என்னவோ முதல் 5 நிமிசமும் பெருசா திருப்பதி இல்லை.
    கெளதம் மேனன் ஸ்டைல், அதுவும் எங்கடை குறைபாடுகளை மறைக்க தான் அண்ணா ..
    சுஜாதா book , 5 பக்கங்களை கூட தாண்டேல ஆனா '2 state ' பாதிப்பு இருக்கந்தான் செஞ்சிச்சு.. (அனன்யா எண்ட பேர் கூட அதன் பாதிப்பு )
    make up – திருத்திகிறோம்..
    கலை விழா நாடகம் என்னுடையது இல்லை சுதா அண்ணா.. இயக்க உதவி மட்டும் தான் .. அருமை தம்பி மகிழ் ட நாடகம் அது…

  2. யாராவது producers முன் வந்து எங்கடை படத்தை produce பண்ணினால், முதல் பாதியை சற்று வித்தியாசமா இன்னும் interesting ஆ reshoot பண்ண விருப்பமாய் இருக்கிறது எங்கள் படக்குழு.. படத்துக்கு முன்னால பெரிய எழுத்தில் பெயர் போடப்படும்…

Leave a reply to mathushangar Cancel reply