ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 3

நீண்ட காலமாகவே எழுதவில்லை,  அண்மையில் எழுதிய பதிவுகள்  எல்லாம் மொக்கையாக இருப்பதாகவே உள்ளுணர்வு சொல்லுகிறது. . நண்பர்களிடமும் கேட்டுப்பார்த்தேன், எதுவும்  சொல்லவில்லை , பேஸ் புக்கிலும் ஒன்றிரண்டு பேரே லைக் பண்ணி இருந்தனர்.

அனால் தனது முயற்சியில் சற்றும்  மனம் தளராத விக்கிரமாதித்தன் , பழைய பதிவுகளின் ரிதத்துக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் இந்திய பயணம் தொடர்பான மூன்றாவது மொக்கை பதிவை ஆரம்பிக்கின்றான்.

தேனியில்இருந்து திருச்சிக்கான நெடுஞ்சாலை அழகானது, தமிழ்நாட்டின் பசுமையான பக்கம் இந்தப்பக்கங்களில் தான் பார்க்க முடிகிறது. இரு மருங்கிலும் வயல்களும் தோட்டங்களும் , அழகாய் இருந்தது. வாகனத்தை நிறுத்தி வயல்களில்களும் தோட்டங்களிலும் புகுந்து கொண்டோம். மாலையில் உச்சிப்பிள்ளையார் , இந்தியாவின் மிகப்பெரிய யவுளியகம் சராதாஸ், மங்கள் அண்ட் மங்கள் என்று திருச்சி வீதிகளில் சுற்றியலைந்து விட்டு அடுத்த நாள் காலை ஸ்ரீ ரங்கம் கிளம்பினோம்.

திருச்சியில் அழகு கர்நாடகத்தின் கைகளில் உள்ளது. காவிரியில் தண்ணீர்  வேண்டும் பல காலங்களுக்கு முன்னால் ஆர்பாட்டம் செய்தவர்கள் , நதி நீர் இணைப்பு பற்றி பேசியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை போராடி பெறமுடியாத தலைவர்களை   எல்லாம் நாம் உலக தமிழினத் தலைவர்கள் என்று போற்றிக்கொண்டு இருப்பதாலே நம் இனம் வீழ்ந்து கொண்டு இருக்கிறது. .

இந்திய சரித்திர ரீதியாக பார்த்தால்.. ராஜ ராஜன் காலத்துக்கு பின்னால் தமிழினம் பெரும்பாலும் அடிமைப்பட்டு தான் இருந்திருக்கிறது. வந்து போனவன் எல்லாம் தமிழனை அடிமைப்படுத்தி வைத்ததாக தான் பார்க்கமுடிகிறது. மொகலாய மன்னர்களும்  ஐரோப்பியரும் தான் கடந்த ஆயிரம் ஆண்டு கால தமிழரின் அடிமை சரித்திரம் எழுதி  இருக்கிறார்கள் ,  எனவே இன்றைய தமிழக அரசியல் வாதிகளின் குணவியல்பு குறு நில மன்னர்கள் போல் பொருள் செர்ப்பாளர்கலாகவும் , விலை போகும் ரசாக்களாகவும், எட்டப்பர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஒன்று மில்லை.  சரித்திரமும் அதை தான் சொல்கிறது..

காலையில் ஸ்ரீரங்கம் போனோம்,  ஸ்ரீரங்கம் எதோ அதிகம் பரீச்சியமான சொல், நான் அதிகம் வாசித்த சுஜாதா , வாலி போன்றோரில் எழுத்துக்கள் பெரும்பாலும் ஸ்ரீரங்கத்து வீதிகளிநூடகவே  பயணித்து இருக்கிறது.

மிக பிரமாண்டமான ரங்கநாதர் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று போட்டிருக்கிறார்கள்.ஆனாலும்  ராஜ குமாரிகளின் சோழ வெட்கமும் , சேர நளினமும் , பாண்டிய பாந்தமும் பரவிய மண்ணில் , ஒரு முஸ்லிம் தேவதையின் பாதம் பெருமாளை தரிசித்ததாக சரித்திரம் கூறுகிறது.

அலாவுதீன் கில் என்னும் அரசனின் கையில் இந்தியாவின் முக்கிய பகுதிகள் வீழ்ந்து இருந்தன, அந்த அலாவுதீன் கில்லின் யுத்த தளபதி முகமது அலி. தென்னிந்தியா பிரதேசங்களின் காவல் கட்டமைப்புக்காக திருச்சிராப்பள்ளியில் முகாமிட்டிருந்த அவனின் மகள் தான் மூன் சென்.

இந்த மூன் சென் பெருமாள் மீது காதல் கொண்டதாகவும், இந்து மதத்தின் மேல் நேசம் கொண்டதாகவும்.. ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு அடிக்கடி வந்தாதாகவும் ஆரம்பிக்கும் அந்த கதை, பெருமாளை சிலையை பிரிந்து  சென்ற சோகத்தில் அவள் இறந்ததாகவும்.. அவளின் நினைவாக ராமானுஜர் துலுக்க நாச்சியார் கோவில் என்று ஒன்றை கட்டி மக்களை வழிபட செய்ததாகவும்  கூறுகிறது.

ஆக துலுக்க நாச்சியார் என்ற முஸ்லிம் பெண்ணுக்கு கோவில் ஸ்ரீரங்கம் பிரகாரத்திலேயே இருக்க இந்துக்களுக்கு மட்டுமே தரிசனைக்கு  அனுமதிக்கிறது நவீன இந்தியா.

தசாவதாரம் படத்தில் பார்த்தது போன்ற சிலை மூலஸ்தானத்தில் இருக்கிறது. அதை பார்ப்பதற்கு பல்வேறு விலைகளில் டிக்கெட் தருகிறார்கள். இப்போதெல்லாம் நான் economics சில் “price discrimination” என்ற concept இனை விளங்கப்படுத்துவதுக்கு ஸ்ரீரங்கத்து பெருமாளையே உதாரணம் எடுப்பதுண்டு . ஒரே  product பட் டிபிபிறேன்ட் prices.
கோவில் இருந்து வெளியில் வந்த போது தான் , அந்தச் சிறுமியை சந்தித்தேன், இந்த மொக்கை தொடரின் நாயகி , நான் தலைப்பில் போட்ட தேவதை எல்லாமே அவள் தான். ஒரு ஏழு அல்லது  எட்டு வயதிருக்கும் , எதோ ஒரு துரு துரு என்ற  குறும்பான அழகு, அழகான கண்கள் , கொஞ்சம் நிறம் மங்கிய பட்டுப் பாவாடை சட்டை ஒன்றை அணிந்திருந்தாள்.
எதிர்பார்க்காத நேரத்தில், அண்ணா.. ண்ணா காசு குடுண்ணா, பசிக்குதுண்ணா என்று கொஞ்சும் குரலில் கையை பிடித்துக்கொண்ட அவளுடனே என் அடுத்த பத்து நிமிடத்து உரையாடல்கள். 
நான்: யாரு உன்னைய இப்படி கேட்டக சொன்னங்க ?
சிறுமி : தெரியாதுண்ணா
நான் : அப்பா என்ன செய்யுறாரு ?
சிறுமி : பொம்மை விக்கிறாரு
நான் : எங்க ?
சிறுமி : திருச்சி டவுண்ணுல அண்ணா 
நான் : அப்பாவுக்கு தெரியுமா நீங்க  இப்படி காசு வாங்கிறது ?
சிறுமி : ……. (மௌனம்)
நான் : அம்மா ?
சிறுமி : கூலி வேலை செய்யுதுண்ணா
நான் :  வீட்ட்ல தம்பி தங்கச்சி இருக்க ?
சிறுமி : இரண்டு தம்பி பாப்பா அண்ணா…அண்ணா.. ண்ணா காசு குடுண்ணா, பசிக்குதுண்ணா..
முதலில் பத்து ரூபாய் கொடுத்தேன், சிரித்தாள்.. அப்படி ஒரு சந்தோசம், அழகாய் இருந்தாள். 
சிறுமி :THANKS  அண்ணா…அப்படியே வெட்கப்பட்டுக்கொண்டே.
நான் தொடர்ந்தேன் : படிக்கிறியா ?
சிறுமி : : ……. (மௌனம்)
நான் : இஸ்கூல் போறனியா ( ஒரு வேளை என் தமிழ் விளங்கவில்லையோ என்ற நினைப்பில் ?
சிறுமி : முன்ன போனன் அண்ணா
நான் : ஏன் நிறுத்தினாங்க ? (மொக்கை QUESTION தான் ஆனாலும் நான் கெட்டன்)
சிறுமி : தெரியாதுண்ணா… நிறைய கேள்விகள் கேட்டதற்காக என்னிடம் உரிமை எடுத்துக்கொண்ட அவள் அண்ணா.. ண்ணா ஜுஸ் வாங்கித்தாண்ணா என்று கெஞ்சும் குரலில்.. 

சரி எண்டு கோவில் வீதியில் இருந்த கடைக்கு கூட்டிச்சென்றேன். அங்கு கடைக்காரர் கடையை திறந்து விட்டு எங்கோ போய்விட்டார். . அடுத்த கடைக்கு போகலாம் என்று கூப்பிட்டேன் .. வரமாட்டேன் என்றாள்…யாரோ அறிவுறுத்தி இருக்கிறார்கள் கோவில் எல்லையை தாண்டி போகவேண்டாம் என்று ..  இவள் இரப்பதற்கு தயார்படுத்தப்பட்டவள் எண்டு புரிந்தது.
ஆனாலும் பாவமாய் இருந்தது, ஜுஸ் வாங்கி கொடுக்க முடியவில்லை எண்டு. ஐம்பது ரூபா கொடுத்து இந்த கடையில இருக்கிற எல்லா டைப் ஜுஸ்சும் வாங்கி குடி என்ன , யார்ட்டையும் கொடுக்காத என்று சொன்னன். மீண்டும் THANKS  அண்ணா…உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள். பக்குவப்பட்ட முறையில் எட்டு வயது குழந்தையால்  நன்றி உணர்ச்சியை காட்ட முடியும் எண்டு எனக்கு அன்று தான் தெரியும்.  
அதிக நேரம் பேசிக்கொண்டு இருக்க பயமாகவும் இருந்தது .. சிலர் பார்த்துக்கொண்டும் போயினர். ஒரு வேளை ஆண்டவனுடைய (நான் கடவுள்) அக்களாய் இருக்குமோ எண்டு பயமாய் இருந்தது  .. 🙂
இன்றும் கண்களுக்குள் நிக்கிறாள் அந்த அழகு தேவதை, அவள் நாளை ஒரு படித்தவளாக இருக்கலாம் , ஒரு MODEL ஆக  இருக்கலாம், sports woman ஆக இருக்கலாம்.. அனால் இன்று பிச்சை தான் எடுத்துக்கொண்டு இருக்கிறாள் . டிரோஷன் சொன்னான் ஒரு வேளை அந்தப்பிள்ளை கலைஞருக்கு கடிதம் எழுதவில்லையோ ? 
   
ஒரு பக்கம் திருபப்தியாய் இருந்தது, ஒரு குட்டிச் சிறுமியின் குட்டி அசையான தான் ஆசைப்பட்ட ஜுஸ் வாங்கி குடிக்க நான் உதவியிருக்கேன் எண்டு.. அனாலும் விடை    தெரியாத கவலைகள், தென்கிழக்குச் சீமையில செங்காத்து பூமியில வாழுற  அந்த ஏழபட்ட  சிறுமியின் எதிர்காலம் எப்படி இருக்குமென்று ?

தொடரும்…..

ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 1

   

Advertisements

2 thoughts on “ஸ்ரீரங்கத்து தேவதையும்……..மாற்றம் தந்த இந்திய பயணமும் – 3

  1. அண்ணா நல்ல இருக்கு, மொக்கைய இல்லை…. 🙂
    அந்த குட்டி தேவதையின் படம் இருக்கும் எண்டு எதிர்பார்த்தன்…..

  2. ஹல்லோ ஹரண் நீங்கள் தமிழ் நாட்டை ஏன் இந்தியாவையே சரியாய் புரிந்து கொள்ளவில்லை என்று தோண்றுகிறது. இந்தியா பூரா இப்படித்தான் இருக்கு. குழந்தையை பிச்சை எடுக்கவிட்டு விட்டு பத்தடி தூரத்தில் அதன் அப்பன் குடிகாரன் கூடவே வந்து கொண்டிருப்பான். நீங்கள் ஐம்பது ரூபாய் கொடுத்ததும் அதை பிடுங்கி டாஸ்மாக் கில் டெபாசிட் பண்ணிவிடுவான். இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தால் உங்கள் மேல் சந்தேகம் வந்து கூட்டமாய் வந்து உதைக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது மதிய உணவு திட்டம் ஸ்கூலில் இருப்பதால் பாதிப் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புகிறார்கள். இல்லாவிட்டால் அத்தனையும் பிச்சைதான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s