மனசுக்குள்ள மைனா…மைனா

மைனா நல்ல படமா, ரசனைக்குரியதா, எல்லோருக்கும் பிடிக்குமா  என்று எனக்கு சொல்ல தெரியல, ஆனாலும் எழுதணும் போல இருந்திச்சு மைனாவ பற்றி, எதோ அங்கங்க ஒரு தரமான ஆர்ட் ப்லிமுக்கான சாயல் தெரியுது, ஒளிப்பதிவாளர் நிறையவே மினக்கெட்டு இருக்கிறார்.. பசுமையான அந்த  இயற்கையை அப்படியே ரசிக்க தருவதற்கு. ஒட்டு மொத்த படமும் கண்களுக்கு குளுமை.   
விளம்பரங்கள் உணர்வுகளை தூண்டியது , நண்பன் ஒருவன் நல்ல இருந்திச்சு என்று பேஸ் புக்குல போட்டான்.  காதலாகி,  கசிந்து , கண்ணீர் மல்கி , படத்த பற்றி நிறைய பேர் பேசினதால அப்படி என்னதான் காதல் , அது எப்படியிருக்கும் எண்டு பார்க்கவேண்டும் போல இருந்திச்சு. எங்க போகுது என்று தேடிப்பாத்தால், கேபிடல் – கொழும்பு என்று இருந்தது. கொழும்புலையே மிக மோசமான திரையரங்கு என்றால் இது தான்…அதனால் தான் என்னவோ பால்கனி டிக்கெட் நூற்று ஐம்பது ரூபாவுக்கு தருகிறார்கள். பல அசொகரியங்களுடன் படம் பார்க்க நேரிட்டது. 
இந்த திரையரங்கில் நான் படம் பார்க்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இது, இதற்கு முதல் சுமார் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னால தனுஸ் , ப்ரியா மணி நடித்த ஒரு படம், பாலு மகேந்திரா நீண்ட நாட்களுக்கு  பிறகு இயக்கி இருந்தாரு.. படத்தினுடைய பேரு கூட “அது ஒரு கனாக்காலம்”  என்று நினைக்கிறேன். அது ஒரு தரமான படம். அத இங்க சொல்ல நிறைய காரணம் இருக்கு , மைனா படத்துக்கும் அந்த படத்துக்கும் நிறைய வித்தியாசம் இல்ல. இரண்டுமே ஒரே மாதிரியான கதை, திரைக்கதை ..சம்பவங்கள் கூட ஒரே மாதிரி தான் இருந்திச்சு  எனக்கு, என்ன அந்த படம் கொஞ்சம் நடுத்தர வர்க்கத்து கதை, இது அடித்தட்டு மக்களின் கதை என்றபடியால் உணர்வுகளும் வன்முறைகளும் கொஞ்சம் வேற  மாதிரி இருந்தது.  ஆனாலும் நான் ஒரே திரையரங்குல, ஒரே நண்பர்களுடன் பார்த்த ரெண்டே ரெண்டு படமும் ஒரே மாதிரி இருந்தது நிறையவே ஆச்சரியமாக இருந்த்தது. 
கதையின் நாயகன் விதார்த் கூத்துப் பட்டறையில் இருந்து வந்திருக்கிறார். கலைந்த கேசமும் கசங்கிய சட்டையுமாய் தனது நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். அந்த பொண்ணும் தேர்ந்த நடிப்பால மனசுல நிக்குது. இரண்டு பேருக்கும் இடையில இருக்கிற காதலும் சில பாடல்களும்  தான் படத்துல ரசனைக்குரிய பகுதி. 

அனாலும், சுருளி என்கிற கதாநாயகனுடைய கரெக்டேரை நியாப்படுத்தும் விதம் தான் எனக்கு முரண்பாட இருக்குது. நாயகன் சுருளி சிறு வயதிலேயே ரவுடி போல் வளர்கிறார், அப்பா , அம்மா , ஏன் மைனாண்ட  (காதலி) அம்மாவை கூட அடித்து துவைத்து விடுகிற வீட்டு வன்முறையாளன் என்கிற வகையில் சித்தரிக்கபட்டிருக்கிறது. ஆனா அவருடைய  காதல் மட்டும் அப்படியே மென்மையாக விழியில் விழுந்து , இதயம் நுழைந்து , உயிரில் கலந்து நிக்குதாம். காதல் பண்ணேக்க மட்டும் சுருளி மல்டிபல் பெர்சொனளிட்டி ஆவது நிறையவே முரண்பாட இருக்குது. ஒரு வன்முறையாலனது காதல் மட்டும் எப்படி இவ்வோளவு மென்மையா இருக்கிறது என்கிற தமிழ் சினிமாவின் ஆண்டாண்டு கால கோட்பாடு எனக்கு குழப்பமா இருக்குது. 
ஏட்டு தம்பி ராமையா வும், அவர   கூட்டிக் கொண்டு சுருளிய தேடி  மலைக்கிராமத்துக்கு வரும் இன்ஸ்பெக்டரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.  தம்பி ராமையா நிறை இடங்களில் சிரிக்க வைக்கிறார், அவரின் ரிங் டோன்  ‘மாமா… நீங்க எங்க இருக்கீங்க…’ வைத்து பல இடங்களில் வெவ்வேறு விதமாய் டைரக்டர் சொல்லி இருக்கும் காமெடிஅருமையான கற்பனை. இதே மாதிரி தனுசை தேடி வரும் இரண்டு போலிஸ் கரெக்ட்டர் நான் மேலே சொன்ன பாலு மகேந்திர படத்திலும் இருந்தது. படம் நன்றாக போகிறது,கிளைமாக்ஸுகளுக்கான நல்ல நல்ல இடங்களையெல்லாம் தவறவிட்டுக்கொண்டு வரும் போதே அனுமானிக்கமுடிகிறது, காவியம் படைப்பதற்காக ஒரு ட்ராஜிடிக் முடிவுடன் இயக்குனர் காத்துக்கொண்டிருக்கிறார் என்று. நினைத்தது நடக்கிறது..கடைசி பதினைந்து நிமிடங்களும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் , ஆஹா , ஒஹோ என்று இருக்க வேண்டிய படத்தை ,எதோ ஒரு வலியுடன், ஆழமான மௌனத்துடன், விடை தெரியாத கேள்விகளுடன்  முடித்து வைக்கிறது.  படம் பார்த்த ஒரு திருப்தி இல்லை. .
முடிவு தொடர்பில் எனக்கு உடன் பாடு இல்லை. எனவே நான் இயக்குனராக  இருந்தால்..


சீன் -86
கதாநாயகனை, மீண்டும் ஜெயிலில் கொண்டு வந்து விடுகிறார் இன்ஸ்பெக்டர்….. 
..
..
என்ற இடத்தில தொடங்கி …வேறு மாதிரி இருந்திருக்கும். 


மொத்தத்தில் காதலர்கள் சேருவார்களா,சேர மாட்டார்களா என சஸ்பென்ஸ்  மெயிண்ட்டன் பண்ணுவதில் டைரக்டர் ரொம்ப தெளிவாக இருந்தும், அது தான் படத்தின் ஆதாரம் என்று தெரிந்தும்…. முடியாமல் முடிகிறது மைனா. 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s