"நாளைய திலகம்" டிரோஷனுக்கு பாராட்டு விழா

பக்கத்தில் இருக்கிற வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிக்க முடியாம, வீட்டுல நித்திர கொள்ளுற ஆக்கள் இருக்கிற இந்த ஊருல, அவசர வேலைகளுக்கும் இடையில போகவர நானூறு கிலோமீட்டர் தூரம் வவுனியாவுக்கு பயணம் செய்து, பெரும்தொகையான பணம் செலவு செய்து, வாக்களித்து விட்டு ஒரே நாளில் திரும்பி வந்த டிரோஷனின் ஜனநாயக உணர்ச்சியை இந்த உலகம் வியந்து பார்க்கிறது. தோத்துப்போன பொன்சேகாவுக்கு அவர் காட்டிய அபரிமிதமான பாசம், கொள்கை மீது அவர் கொண்ட உறுதிப்பாடு என்பன இன்னும் ஏழு ஏழு சந்ததிக்கு தமிழர்கள் படிக்க வேண்டிய கட்டாய பாடம்.

இவரின் இது போன்ற சாதனையை பாராட்டி, பட்டம் சூட்டி , பதக்கம் வழங்க வேண்டியது எதிர்கால தமிழரின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்கான முதல் படி. ஒரு வாக்கு தானே என்று அலட்சியப்படுத்தாமல் ஒட்டு மொத்த தமிழரும் சேர்ந்தால் தான் பலம் என்று நிருபிக்க அவர் காட்டிய ஆர்வத்தின் மூலம் , தமிழினத்தின் விடிவெள்ளியாக வலம் வருகிறார்.

காரணமே இல்லாமல் வோட்டுப்போடாத தலைநகரத்தின் உணர்வில்லா தமிழர்கள், எத்தனையோ மல்டிபரல்கள் , கிபிர் விமானங்கள் பார்த்திருந்தும், இரண்டு மூன்று கைக்குண்டுகளுக்கு பயந்து தமது வாக்குரிமையை பணயம் வைத்த உணர்விருந்தும் துணிவு வராத தமிழர்களுக்கு இடையில் வன்முறைகளுக்கு மத்தியில் வாக்களித்த டிரோஷன் சரித்திரத்தில் இடம்பெற வேண்டியவர்.

அடிமைப்பட்டு இருக்கும் தமிழரின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டிய முக்கியமான தேர்தலில், இனவாத பிரசாரங்களுக்கு மத்தியில் , கூட்டமைப்பையும் பங்காளியாக்கி போட்டியிட்ட பொன்சேகா தப்பித்தவறி ஒரு லட்சம் , ஐம்பதினாயிரம் வோட்டு வித்தியாசத்தில் தோற்றிருந்தால் எம்மை நம்பி சம்பந்தம் பேசியவர் பெருத்த அவமானம் அல்லவா அடைந்திருப்பார். வடக்கில் இருபதுக்கும் குறைவான வீதம் மட்டுமே வாக்குகளை பதிவாக்கி எங்கேயும் எப்போது தமிழர்களை நம்பி ஒண்டு செய்யக்கூடாது எண்டு இரண்டாவது தடவையாக உலகுக்கு காட்டிய எம்மிடையே டிரோஷன் போன்ற போன்ற வீராதி வீரர்களும் இருக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சி தரும் விடயம்.

வெளிநாடு சென்றவர்கள், வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தவிர்த்து அறுபது வீத வாக்குப் பதிவுக்கான வாய்ப்பு இருந்தது, அப்படியும் எம் சனம் உறுதியாக ஒன்று பட வில்லை என்பது அரசியல் ரீதியாகவும் எமக்கு தீர்வு பெரும் திராணி இல்லை என்பதையே குறியீடாக காட்டுகிறது. எனவே இனிவரும் காலங்களில் தேர்தல்களை தவிர்த்து , பெரிதாய் ஆர்ப்பாட்டம் பண்ணாமல் ஒற்றுமையாய் அடிமைப்பட்டு வாழ்வோம் என்று நினைக்கையில் , இப்படி டிரோசன் போன்ற இளம் சிங்கங்களும், இது போல உணர்வுடன் வாக்களித்த பலரும் எதிர்காலத்த மாத்த புறப்பட வேணும்.

எனவே அவரின் இன உணர்வையும், பொறுப்புணர்வையும் வியந்து கொண்டாடும் அன்னாரின் பாராட்டு விழாவுக்கு , முதல்கட்டமாக ஐநூறு ரூபா நிதி உதவி அளிக்கிறேன் , மேலும் பல அன்பர்கள் நிதி உதவி அளிப்பதன் ஊடாக அன்னாரின் பாராட்டு விழாவிலும் , தொடந்து நடைபெறும் விருந்து உபசாரத்திலும் கலந்து கொள்ளலாம், நிதி அளித்தவர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிட தக்கது.. தகுந்த நிதி சேரும் இடத்து பாராட்டு விழா வெள்ளவத்தையில் உள்ள நல்ல சாப்பாட்டு கடையில் நடைபெறும்.

Advertisements

6 thoughts on “"நாளைய திலகம்" டிரோஷனுக்கு பாராட்டு விழா

  1. நல்தோர் சிந்தனை .. குஜராத் அரசு போல் வாக்களிப்பை கட்டயமாகியிருந்தால் இலங்கையிலும் ஒரு அரசியல் மாற்றம் எதிர்பாத்திருக்கலாம்.. மகிந்தவின் சிவப்பு சால்வை அணிந்திருக்கும் டிரோஷன் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார் என்ற காரணத்தினாலும் ,அவரின் ஜனநாயக உணர்ச்சி யை முன்னிட்டும் அவருக்கு பாராட்டு விழா வைப்பது ஒரு சிறந்த முடிவு …. 😉 🙂

  2. கழக கண்மணியே, என் ரத்தத்தின் ரத்தமே, உடன்பிறப்பே, சரன் பொன்சேகாவிற்கு வாக்கறித்த உன் கடமை உணர்வை கண்டு எனக்கு புல்லரிக்கிறது, உனக்கு என் நெஞ்சில் என்றும் இடமிருக்கு. 🙂

  3. Thambi Diroshannin Jananayaga Unarvu Paratta thakkathu.. Paratu villa enge enral nithi uthavyodu vanthu kalanthu undu kallithuvitu pohirom

    Duvaraga

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s