ராஜ் ராஜரட்ணம் கைது, பாதிக்கப்படுமா இலங்கை பங்குச்சந்தை?

இலங்கை பங்குச்சந்தை அபரிமிதமான வளர்ச்சியை காட்டி , வளர்ச்சி வேகத்தில் உலகிலேயே முதல் நிலையான பங்குச்சந்தையாக வந்திருக்கிறது. வெளிநாட்டு முதலீடுகள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. பங்கு விலைகள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் வெளிவந்திருக்கும் செய்தி இலங்கை முதலீட்டாளர்களை மட்டுமன்றி அமெரிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அமெரிக்காவின் 239 வது நிலையில் உள்ள செல்வந்தரும் , முதல் நிலையில் உள்ள இலங்கையில் செல்வந்தருமான ராஜ் ராஜரட்ணம் ” insider dealing” என்னும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். போர்ப்ஸ் சஞ்சிசிகையின் படி இவரின் சொத்து மதிப்பு ஆயிரத்து இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கல்லேன் குழுமம் என்னும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனத்தின் உரிமையாளராகவும் , முன்னணி பங்கு வணிகராகவும் இவர் இருப்பதனால் இவரின் கைது நியூயார்க் பங்குச்சந்தையில் சில அதிர்வலைகளை  ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த ராஜ் ராஜரட்ணம் ?
இலங்கையரான ராஜ் ராஜரட்ணம் , சென் . தாமஸ் கல்லூரியில் கல்விகற்றவர், பின்னர் பிரித்தானியாவில் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில்  தனது பொறியியல் கல்வியை கற்ற ராஜ் , எண்பதுகளின் தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு தனது M.B.A பட்டத்தை வால்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொண்டார். பின்னர் முதலீட்டாளராக தன்னை  நிலை நிறுத்திக்கொண்டு, கல்லேன்  குழுமம் என்ற தனது நிறுவனத்தை நிறுவி ஏராளமான கம்பனிகளில் முதலீடுகளை மேற்கொண்டார்.   மிகப் பிரபலமான ” IT பூம் ” காலப்பகுதியில்  அதிகம் பயனடைந்த முதலீட்டாளர்களில் ஒருவராகவும் ராஜ் கருதப்படுகிறார்.

“insider dealing” என்றால் என்ன? 
ஒரு கம்பனியின்  பிரசுரிப்பதற்கான நிதியறிக்கைகளை மட்டுமே அதன் பங்குதாரர்களோ அல்லது பொது மக்களோ பார்க்க முடியும் , இந்த அறிக்கைகள் மட்டுமே கம்பனி ஒன்றால் உத்தியோக பூர்வமாக பிரசுரிக்கப்படும் , இவை தவிர்ந்த சில பிரத்தியேகமான , பெறுமதியான தகவல்களும்  செய்திகளும் ஒரு கம்பனியில் இரகசியமாக பேணப்படும். இது போன்ற பெறுமதியான தகவல்களையும் , நிதி நிலைமைகளையும் கம்பனியின்  அனுமதி இல்லாமல் கசிய விடுதல், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்  போன்றன “insider dealing” என்று கொள்ளப்படும். இது போன்ற தகவல்களால் பங்குச்சந்தையில் செயற்கையான விளைவுகளை ஏற்படுத்தி இலாபம் அல்லது நட்ட நிலைமைகளை ஏற்படுத்தலாம்,  உதாரணமாக கூகிள் நிறுவனத்தில் நாற்பது வீதமான பங்குகள் microsoft நிறுவனத்துக்கு விற்கப்பட இருக்கிறது என்பதை கூகிள் ஊழியர் ஒருவர் மூன்றாம் நபரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளிப்படுத்தினால் அதை insider dealing எண்டு சொல்லமுடியும்.

தண்டனை என்ன?
இது போன்ற insider dealing கள் கிரிமினல் குற்றமாகவும் , சிவில் குற்றமாகவும் கருதப்படும், இரண்டு குற்ற அடிப்படைகளின் கீழும் , அபராதமும் , சிறைத்தண்டனையும் குற்றத்தின் விளைவுகளை பொறுத்து வழங்கப்படும்.

ராஜ் செய்த insider dealing என்ன ?
இருபது மில்லியன் டாலர் பெறுமதியான insider dealing குற்றத்தை ராஜ் செய்திருப்பதாக தெரிய வருகிறது. அவை பின்வரும் பிரபலமான கம்பனியின் பங்குகளுடன் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன International Business Machines (NYSE: IBM), Advanced Micro Devices (NYSE: AMD), and Sun Microsystems (NYSE: SUN). Other companies included Google (Nasdaq: GOOG), Polycom (Nasdaq: PLCM), and Hilton hotels. மூன்று மாதங்களாக அவரின் தொலைபேசியை ஓட்டுக்கேட்டதாகவும் , குற்றம் நிரூபிக்க பட்டு உள்ளதாகவும் , ராஜுடன் சேர்த்து மேலும் ஆறு முதலீட்டாளர்களும் கைது செய்ப்பட்டு இருப்பதாக FBI அறிவித்து இருக்கிறது.

இலங்கையில்  என்ன தாக்கம். ?
இவரின் ஏராளமான  பணம் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் முதலிடப்பட்டு இருக்கிறது. இலங்கை பங்கு சந்தையில் அதிகம் முதலிட்ட தனி நபர் இவர் தான் எண்டு சில தகவல்களும் உண்டு. நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறையவே ஆதிக்கம் உள்ள இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் முன்னணி வியாபார இதழின்(LMD) முன் அட்டையை அலங்கரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கவர். தன்னுடைய முதலீடுகளுக்கு என்றே தனி பங்கு தரகர் நிறுவனம் தொடங்கும் அளவுக்கு ஆதிக்கம் நிறைந்தவர் கைது செய்யப்பட்டு இருப்பது இலங்கை பங்குச்சந்தையை ஒரு உலுக்கு உலுக்கும் என்றே கருதப்படுகிறது.
திங்கள் கிழமை பங்குச்சந்தை எத்தனை புள்ளிகளால் குறைகிறது என்பதை வைத்தே இவரின் கைது ஏற்படுத்த இருக்கும் தாக்கங்களின்  பெறுமதியை மதிப்பிடலாம்.

Advertisements

One thought on “ராஜ் ராஜரட்ணம் கைது, பாதிக்கப்படுமா இலங்கை பங்குச்சந்தை?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s