"யாமம்" ஏற்படுத்திய தாக்கம்

நாவல் என்றால் எப்போதுமே ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் எஸ். ராமகிருஷ்ணனின் இந்த நாவல் படித்து முடித்தவுடன் நிறையவே வலுப்பெற்றிருக்கிறது. முன்னர் கூட இவரின் ஊறுபசி என்ற நாவல் படித்திருக்கிறேன். அது பக்கங்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் ஒரு நாளில் படித்து முடிக்க கூடியதாக இருந்தது. அதில் சம்பத் என்ற கதாபாத்திரம் ஏற்படுத்திய துயரம் பல நாள் வரையில் மனதில் ஓட்டிக்கொண்டு இருந்தது. அதன் பின்னரே சிறுகதைகள் கட்டுரைகள் தாண்டி நாவல்கள் மீதும் ஆர்வம் பற்றிக்கொண்டது.

அந்த வகையில் இந்த யாமம் என்கிற நாவலின் ஆரம்பம் பெரிதாக கவரவில்லை என்பதால் , சில நாட்களில் ஓரிரெண்டு பக்கங்கள் கூட தாண்டுவதில்லை. இப்படி பல நாட்கள் வாசித்தும் நூறு பக்கங்கள் தாண்டாத புத்தகத்தை ஒரு நிறைந்த பௌர்ணமி தினத்தில் , முற்றிலுமான ஒரு லீவு நாளில் முடியும் வரை வாசித்த போது தான் அதன் சுவையும், கதாபத்திரங்களின் வலியும் சேர்ந்து நிறைவை தந்தது.

கதையும் அதற்கான சம்பவங்களும் ஆயிரத்து என்னூராம் ஆண்டுகளில் நடப்பதாக அமைந்திருக்கிறது. நான்கு கதைகள் தனித்தனியே நடந்தாலும் யாமம் என்ற வாசனை திரவியத்தால் ஒன்றாக பிணைக்கப்படுகின்றன. வாசித்து முடித்தபின் கதையில் வந்த சில சம்பவங்கள் உண்மை போன்று தோன்றியதால் , இணையத்தில் தகவல் தேடினேன் , சில ஆங்கில ஆளுநர்களில் பெயர்கள், விக்டோரியா மகராணி பற்றிய தகவல்கள் ,ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து நாளில் மதராஸ் பட்டணத்தில் காலரா வந்தது பலர் இறந்து போனது , அந்த காலராவை தடுக்க ஆங்கிலேய ஆளுனரால் வெளியிடப்பட்ட ஹன்சாட் அறிக்கை என்பன கதையோடு நிறையவே ஒத்து பெரும் வந்த நிறைய சம்பவங்கள் இணையத்தில் கொட்டிக் கிடந்தமை நிறையவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அன்றைய நாளின் வாழ்கை முறையும், எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்களை வலியோடு சொல்லிமுடித்து யாமம்.

“எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது.
வெளியீடு ; உயிர்மை பதிப்பகம”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s