காங்கிரஸ் படு தோல்வி, ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு

இப்படி ஒரு செய்திக்காக , ஐந்தாம் கட்ட தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும். தமிழர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இது போன்ற ஒரு செய்தி தான். சோனியா காந்தியும் அவர் காங்கிரஸ் கட்சியும் படு தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதே என் சமீபத்திய விருப்பம். இந்த தேர்தல் கருணாநித்யையும் அவரது அன்னை சோனியாவையும் இருந்த இடம் தெரியாமல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே கருணாநிதியின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலுடன் ஏறக்குறைய முடித்துவிடும் என்பதில் ஐயமில்லை . அதையும் தாண்டி அவருக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருக்குமாயின் ஜெயலலிதா குண்டுக்கட்டாய் தூக்கிவந்து சிறையில் வைப்பார் . மு.க.அழகிரி உட்பட பலருக்கும் ஜெயலிதா பல இன்ப அதிர்ச்சிகள் கொடுப்பார். அவரின் பழிவாங்கும் உணர்ச்சி பற்றி புதிதாய் எதுவும் தமிழக மக்களுக்கு சொல்லவேண்டியது இல்லையே.

என்ன திடீரென்று ஜெயலலிதா மீது பாசம் என்றெல்லாம் இல்லை, அவா வந்தும் எதுவும் செய்து கிழித்துவிட போவது இல்லை , தனி ஈழம், தமிழருக்கு தீர்வு என்பதெல்லாம் வெறும் தேர்தலுக்கனது என்பதை புரிந்து கொள்ளமுடியா அளவுக்கு நான் உணர்வு ரீதியாக முடிவு எடுப்பவன் இல்லை. ஆனாலும் கருணாநிதிமீதான அளவு கடந்த கோபம் , அவர் தமிழ் சமூகத்தின் காவலராக இருந்து கொமேடியானாக மாறியதால் ஏற்பட்ட ஏமாற்றம் என்பன அடுத்த மாற்றீடான ஜெயலலிதா மீது நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது. காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் தாங்களின் பாவம் புரிய ஜெயலலிதா வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.
அடுத்ததாக , நான் அதிகம் மதித்த மனிதர் ப.சிதம்பரம் , ஒரு வழக்கறிஞராக , ஹர்வர்ட் பட்டதாரியாக , சிறந்த ஒரு நிர்வாகியாக மதித்தேன் , ஆனால் இவ்வளவு இருந்தும் தமிழ் உணர்வு மனிதருக்கு குறைவுதான் . சிவகங்கையில் போட்டியிடும் அவர் படு தோல்வி அடைய வேண்டும் என்பதும் என் ஆவல் . பாரதிராஜா ஆவன செய்ய வேண்டும் .அவர்தவிர ஜெயந்தி நடராஜன் , பிரணாப் முகர்ஜி போன்ற அதி மேதாவிகளும் , தேர்தலில் போட்டி இடுவார்களாக இருந்தால் படு தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதும் மிகப் பெரிய ஆசை.
அது தவிர ப.ஜ.க. காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமையும் என்பதே என் எதிர்பார்ப்பு. அப்படி ஒரு ஆட்சி அமைந்தால் ஜெயலிதா அல்லது சந்திரபாபு நாயுடு பிரதமராக வேண்டும் . அதுவும் தமிழ் நாட்டில் இருந்து ஜெயலலிதா பிரதமர் பதவிக்கு நிறையவே பொருத்தமானவர் தான்.
Advertisements

5 thoughts on “காங்கிரஸ் படு தோல்வி, ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு

 1. ///தனி ஈழம், தமிழருக்கு தீர்வு என்பதெல்லாம் வெறும் தேர்தலுக்கனது என்பதை புரிந்து கொள்ளமுடியா அளவுக்கு நான் உணர்வு ரீதியாக முடிவு எடுப்பவன் இல்லை. ஆனாலும் கருணாநிதிமீதான அளவு கடந்த கோபம் , அவர் தமிழ் சமூகத்தின் காவலராக இருந்து கொமேடியானாக மாறியதால் ஏற்பட்ட ஏமாற்றம் என்பன அடுத்த மாற்றீடான ஜெயலலிதா மீது நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது. காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் தாங்களின் பாவம் புரிய ஜெயலலிதா வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.///

  உண்மைதான்!
  தமிழனுக்கு ஏற்பட்டுள்ள இரங்கத்தக்க நிலை!

 2. உங்களை போல முடிவு எடுப்பவர்களால் தான் தமிழர்களுக்கு இந்த நிலையே.

 3. ஜெயாவை தமிழ் மக்கள் நம்பவேண்டும் என்பது கோரிக்கையாக இல்லை…

  ஆனால் ஈழம் அமைப்பேன் எனும் சொல்லுக்காக தமிழ் மக்கள் அதனை அங்கீகரிக்க வேண்டும்…

  ஜெயாவுக்கும் அவர் கூட்டணிக்கும் போடப்படும் வாக்குக்கள் ஈழம் அமைவதை அங்கீகரிக்க போடும் வாக்குக்களாகத்தான் பார்க்க வேண்டும்…

  தமிழக மக்கள் அனைவரும் ஈழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது மட்டுமே எனது ஆவல்…

 4. உங்களைப் போன்ற பலருக்கு ஜெயலலிதாவை ஆதரிப்பதில் ஒரு உள் மன வெட்கம் இருக்கிறது.

  நேரடியாக “ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன்“ என்று சொல்லப் பழகுங்கள் சார். இதிலென்ன கூச்சம் வேண்டியதிருக்கிறது.

  கருணாநிதியை திட்டி, அழகிரியை திட்டி, ப.சிதம்பரத்தை திட்டி, சோனியாவைத் திட்டி, கடைசியாக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று ஏன் சுத்தி வளைக்கிறீர்கள்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s