சுஜாதாவின் பெயரால் ஒரு கோர தாண்டவம்

சுஜாதா என்ற காலத்தால் அழியாதா அந்தப் பெயர் , தம்மானா, ருக்மணி என்று இரண்டு அழகான ஹீரோஇன் போன்ற ஒரு சில காரணங்கள் மட்டுமே அதிகம் நேர்மாறான விமரிசிக்கப்பட்ட இந்தப் படத்தை பார்க்கத்தூண்டியது. ஏற்கனவே படம் எதிர்பார்ப்புக்களை சற்றும் பூர்த்தி செய்யவில்லை என்ற வகையிலான விமர்சனங்கள் நிறையவே வந்திருந்தன. அறிமுகமான காலம் முதலே தம்மன்ன மீது ஒரோ பெரிய ஈடுபாடு . அனால் ஆனந்த தாண்டவம் பார்த்தபிறகு நிறையவே குறைந்துவிட்டிருக்கிறது. ருக்மணி தனித்து தெரிகிறார். பாரதிராஜா அறிமுகம் செய்து வைத்த பொம்மலாட்ட நாயகி என்பது காரணமாக இருக்கலாம்.

சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் என்ற கதையை நான் படித்ததில்லை , ஆனாலும் இந்த ஆனந்த தாண்டவத்தை பார்த்த பிறகு அதை கட்டாயம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இவ்வளவு மோசமான ஒரு வகையில் சுஜாதா எழுதி இருக்க வாய்ப்பில்லை. அவருக்கு என்று தனித்துவமான சில விடயங்கள் இங்கு இல்லை அல்லது தவறாக கட்சிப்படுத்தப்படிருக்கிறது. நான் நிறையவே சுஜாதாவை வாசித்திருக்கிறேன் ஆனாலும் அவர் பெயர் சொல்லி வரும் இந்த படத்துடன் ஒன்ற முடியவில்லை என்பதால் எங்கயோ தவறு நடந்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

அஸ்கர் ரவிச்சந்திரன் எவ்வளவு கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தினாலும், சினிமா ரசிகர்களை இந்தப் படம் மூலம் திருப்திப்படுத்துவது கடினம் தான். எனக்கு தெரிந்த தமிழ் சினிமாக்களில் (விஜய் , ராமராஜன் படங்கள் தவிர்த்து )ஒரு படத்தின் கதாநாயகனை இவ்வளவு மோசமாக சித்தரித்து பார்த்திருந்த சந்தர்ப்பங்கள் மிக குறைவுதான். பல செயட்கைதனமான (ராதக்ரிஷ்ணனின் மொட்டை உட்பட ) காட்சிகள், படத்துக்கு ஒட்டாத நகைச்சுவை , படத்தொகுப்பில் உள்ள தொய்வு என்பன படத்திலிருந்து பல மயில் தூரம் அன்னியப் படுத்துகின்றன. படத்தில் திரைக்கதை , பாத்திரங்கள் தெரிவு போன்ற பல அடிப்படைகளிலேயே தவறு இருக்கிறது. மொத்தத்தில் சுஜாத்தாவின் பெயரால் நடத்திய அகோர தாண்டவம் இந்த “ஆனந்த தாண்டவம்”


(இவருக்காக மட்டும் பார்க்கலாம் )

Advertisements

3 thoughts on “சுஜாதாவின் பெயரால் ஒரு கோர தாண்டவம்

 1. சுஜாதாவின் கதைகளை அவமானப்படுத்துவதில் நமது தமிழ் சினிமா டைரக்டர்களை மிஞ்ச யாருமில்லை.

  அவர் கேட்டாரா இப்படி படம் எடுக்க சொல்லி.. ?

  சொந்த கதைக்கு வக்கில்லாதவன் வேலை இது.

  படம் பார்த்து நொந்து போனேன்..

  பணம்தான் வீண்.

 2. சுஜாதா என்ற பெயருக்காக தான் ரவிச்சந்திரனும் செலவு செய்திருப்பார்.
  அமெரிக்க அலம்பல்களும் , மாளிகை போன்ற வீடுகளும் , கார்களும்
  வீண் விரயம் தான்..

 3. கோரம் என்றால் அவலட்சணம்
  அகோரம் என்றால் அழகு

  (நியாயம், அநியாயம் போல)

  ஆக, தலைப்பை மாற்றி கோரத்தாண்டவம் என்று எழுதுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s