நெருங்கி வரும் ஆபத்து …நிதி நெருக்கடியின் உச்ச தாக்கம் இனிமேல் தானா?

பொருளாதாரம் , நிதி நெருக்கடிகள், கம்பனிகளின் இலாப நட்டங்கள் என்று அந்நிய பட்ட ஒன்றாக இதுவரை இருந்து வந்த விடயங்கள் இப்போது நேரடியாக எமது வயிற்றில் அடிக்கும் நிலைக்கே வந்து விட்டன. எமக்கு நடக்கும் வரை பார்த்துக் கொண்டு இருப்பது தானே எமது பிறவிக்குணம். அதுவரை பக்கத்து வீடு பற்றி எரிந்தாலும் எமக்கு கவலை இல்லை. இதுவரை அப்படி இருந்ததில் குற்றம் ஒன்றும் இல்லை. எதோ பங்குச்சந்தையில் முதலிட்டவர்களுக்கு நட்டமாம் என்று வருத்தம்/சந்தோசம் பட்ட மக்கள் விழித்துக்கொள்ள நேரம் வந்தாச்சு.

வேலை இழப்புக்கள் நமக்கு தெரிந்தவகளுக்கும் நிகழ்ந்திருக்கிறது என்று அடுத்தவர் கதை பேசுவதற்கான நேரம் இது. இந்தியாவில் பரவலாக இப்போது தொடங்கியிருக்கிறது. தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்த பலர் இப்போது பகல் நேர மெகா சீரியல் பார்பபதாய் கேள்வி. இலங்கையில் கூட டயலொக் போன்ற நிறுவனங்களும் இரண்டாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பியதாய் சிலர் கதைக்கினம்.

சரி விடயத்துக்கு வருவம், இதுவரைக்கும் பெரிய நிறுவங்களின் வட்டத்துக்குள் இருந்த நிதி நெருக்கடி , இப்போது நடுத்தர நிறுவனங்களின் வட்டத்துக்கு வந்திருக்கிறது. இதனால் தான் இனி வரும் காலங்களில் பிரச்சனை இருக்கிறது. இந்த நடுத்தர நிறுவனங்கள் எவ்வளவு தூரம் நியாயமாக , இதய சுத்தியுடன் , பங்குதாரரின் நலனுக்காக செயற்படுகின்றன என்பது என்றுமே கேள்விக்குறி தான். எப்போதும் அவை தங்களுடைய நன்மைக்காக தேவையான போது இலாபத்தை உயர்த்தி நாம் சிறப்பாக செயற்படுகிரம் என்று காட்டியும், அதே வேளை பங்குலாபம் குடுக்காமல் தவிர்க்க நட்டம் இருப்பதாக காட்டியும் கோல்மால் செய்வது எந்த நிறுவங்களுக்கும் புதிது இல்லை.

எனவே வருகின்ற மார்ச் மாத கடைசியில் தமது நிதி அறிக்கையை தாக்கல் செய்யும் இந்த கம்பனிகள் தமக்கு இருக்கிற கொஞ்ச இலாபத்தையும் சுருட்டிக்கொல்வதற்கு நிறையவே வாய்ப்புக்களை “நிதி நெருக்கடி” என்ற காரணம் நிறையவே பெற்றுத்தந்திருக்கிறது. அது ஏற்றுக்கொள்ளக்குடிய காரணமும் கூட. எனவே பெரும்பாலான நிறுவனங்கள் எதிர்வரும் நிதி ஆண்டுக்கு இலாபம் இருந்தாலும் கூட பாதகமான நிலுவையையே பங்கு தாரருக்கு போலியாக காட்ட காத்து இருக்கின்றன. எனவே பெரும்பாலான பெரிய , நடுத்தர நிறுவனங்கள் இப்படி முயற்சிக்கும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர் பொருளாதார சரிவை அனைத்து துறையிலும் எதிர்பார்க்கலாம். குறிப்பாக நடுத்தர உற்பத்தி தொழில்கள், மொத்த மற்றும் சில்லைறை வியாபர நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்திக்க வாய்ப்பு நிறையவே இருக்குது. பெரிய நிறுவங்கள் மாடுமே நேர்மையான முறையில் காலாண்டு (முன்றாம்) அறிக்கை வெளிடிட்டு தமது நட்டத்தையும் , வேலை குறைப்பு விபரங்களையும் வெளியிடுகின்றன …அதன் விளைவுகள் தான் நாம் இப்போது காணும் வேலை இழப்புக்கள். எனவே எண்ணற்ற நடுத்தர, சிறிய நிறுவனங்களின் விபரங்கள் இனித்தானே வர இருக்கிறது.

அமெரிக்க பொருளாதாரம் விழுந்தால் கரை ஏத்த ஒபாமாவும் பணமும் அவர்களிடம் இருக்கு. ஆனால் எம்மில் பல முதலைகள் சந்தர்பங்களை பாவித்து சுரண்ட காத்திருப்பதால். …அமெரிக்காவின் விளைவுகளை விட கடுமையான விளைவுகள் சத்தம் இல்லாமல் நெருங்கி வருகின்றன. எனவே தொழில் செய்யும் பலரும் அதிகம் கவனமாக இருக்க வேண்டிய காலம் இனித்தான் வர இருக்கிறது.

Advertisements

One thought on “நெருங்கி வரும் ஆபத்து …நிதி நெருக்கடியின் உச்ச தாக்கம் இனிமேல் தானா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s