Airtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா?

தொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையும் செயற்பாடுகளையும் முடுக்கி விட்டிருக்கின்றன. இந்தியாவின் அதிகமான வாடிக்கையாளர்கள் இப்போது இந்த நிறுவங்களின் பொருள்களையே அதிகம் ஆதரிக்கிர்றார்கள். iதனால் இந்திய நிறுவனங்களின் செயற்பாடு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த இழப்புக்களை ஈடு செய்ய இலங்கை போன்ற ஒரு சின்ன நாட்டிடம் தன் திறமையை காட்ட வந்திருக்கிறது இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனம். எப்போதுமே இந்தியா இலங்கை தொடர்பில் தவறான முடிவுகளையே எடுத்திருக்கிறது என்பது வரலாற்று உண்மை. இந்தியன் IOC கூட இலங்கை அரசிடம் கட்டுப்பட்டு அவர்கள் சொல்வது போலவே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பெருந்தொகையான பணம் மானியம் என்ற வகையில் இலங்கை அரசிடம் இருந்து இந்தியன் IOC கு செலுத்தவேண்டி இருக்கிறது. இன்றும் பலத்த நட்டத்துக்கு மத்தியில் தான் ioc இயங்குவது குறிப்பிடத்தக்கது. அனைத்தையும் தாண்டி இந்தியன் IOC வியாபாரம் என்பதை விட அரசியல் தேவைகளுக்காகவே இயங்குவது குறிப்பிடத்தக்கது.

இப்படியான பல தோல்விகளும் சம்பவங்களும் பாடங்களாக இருக்க , பல பில்லியன் ரூபாய்களை அனுமதிப் பணமாக செலுத்தி உள் நுழைந்து இருக்கும் AIRTEL என்ன சாதிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படியே இயங்கினாலும் பல்வேறு நெருக்கடிகள் airtel நிறுவனத்துக்கு காத்திருக்கிறது. எனவே இன்னும் இரண்டு ஆண்டுகளில் airtel நிறுவனமும் வழமையாக நடப்பது போலவே இலங்கையின் கபட ராஜ தந்திரத்தில் தோற்றுப்போய் இங்கிருந்து தனது நடவடிக்கைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தாலும் வியப்பதற்கு இல்லை. இந்திய கம்பனி என்றவுடன் எம்மவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நிண்டு விண்ணப்பம் வாங்குகிறார்கள். இவர்கள் என்ன நம்பிக்கையில் வாங்குகிறார்கள் என்று புரியவில்லை. தன் நாட்டில் கூட பல்தேசிய கம்பனிகளிடம் போட்டியிட முடியாமல் இருக்கும் இந்த இந்திய கம்பனிகள் தன் நாட்டில் கூட ஏதும் சாதித்ததாக சரித்திரம் இல்லை.

இன்று கூட சத்யம் என்ற மென்பொருள் கொம்பனி கணக்குகளில் தில்லு முல்லுகள் செய்ததன் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தையில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு நிறுவனத்தின் செயற்பாட்டால் ஓட்டு மொத்த இந்திய மென்பொருள் நிறுவனங்கள் மீதும் கரி பூசப்பட்டு இருக்கிறது.

உலகின் பல பகுதிகளிலும் (66 நாடுகள்) சேவை செயல்பாடுகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 50,000 பேருக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள். இந்த நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் மிக அதிக அளவில் வர்த்தகம் ஆகி வருவதும், இதன் பங்கு சென்செக்ஸ் மற்றும் நிபிட்டி குறியீடுகளில் முக்கிய மதிப்பீடு பெற்றிருப்பதும் குறிப்பிட தக்கது. ஆக மொத்தம் ரூ.7136 கோடி நிறுவனத்தின் சொத்துத் தொகையில் அதிகமாக காட்டப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கூத்து என்னவென்றால், உலகத்தில் பெரிய அக்கௌண்டிங் நிறுவனங்களுள் ஒன்றான Price Waterhousecoopers தான் இவர்களது ஆடிட்டர்கள்!

Advertisements

9 thoughts on “Airtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா?

  1. விரைவில் துவங்க உள்ள நெல்லைத்தமிழ் இணையத்தின் திரட்டியில் இணையலாமே…சோதனை திரட்டியில் உங்கள் இடுகையை பதிய…http://india.nellaitamil.com/

  2. ஏயார்டெல்லின் வதந்தியை நம்பாதீ்கள்! காலைப் பொழுதில் அலுவலகம் சென்றவுடன் முதல் வேலையாக மெயில் செக்கப் தான்! வழமை போல இன்று காலையும் கணினி முன் உட்கார்ந்து லொகின் செய்தவுடன் வந்த முதல் மெயிலே ஏயர்டெல் சலுகைகளை பற்றியதாகவே இருந்தது.அதில் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது 1000 இலவச எஸ்.எம்.எஸ், 500 நிமிட இலவச வெளிச்செல்லும் அழைப்புக்கள் என நீண்டதொரு மெயிலாக இருந்தது. எதிர்பார்ப்புடன் அனைத்தையும் படித்தேன். இறுதியில் எயர்டெல் சிம்மை பெற (குறிப்பிட்ட இ.மெயில் முகவரி தந்திருந்தார்கள்) இந்த முகவரிக்கு உங்கள் தகவல்களை அனுப்புங்கள் எனவும், நாங்கள் வெகு விரைவில் தொடர்பு கொள்வோம். என்று குறிப்பிட்டிருந்தார்கள். நான் இந்த சலுகைகளையோ மெயிலையோ நம்பவில்லை. ஏனென்றால் இதுபோல பல தடவைகள் ஏமாற்றத்தை சந்தித்ததால் முதலே Alert ஆகிட்டன்.ஆசை விட்டுவைக்கவில்லை தான் எனினும் மொட்டைக்கடிதம் போல ஒரு வெறும் ஹாய் போட்டு மெயில் பண்ணினேன். உடனேயே இன் -பொக்ஸில் அநாதையாக ஒரு மெயில் வந்திருந்தது. அதில் அழகாக கீழ் குறிப்பிட்டுள்ள வாக்கியங்கள் காட்சியளித்தன!!!Hey idiots, this is a spam message….don’t forward this to anyone……காலைவேளையில் ஒரு ‘குட்மோனிங்’ சொல்லுவம் என்டில்லை இப்படி திட்டி வருதே சகுணம் சரியில்லை போல இருக்கு என மனதுக்குள்ள நினைத்து விட்டு பணிகளை பார்க்க தொடங்கினேன்.நண்பர்களே! வாசகர்களே!இப்படிபட்ட பல ஏமாற்ற வித்தைக்காரர்கள் இணையத்தளத்தில் இருக்கும் வரை ஏமாளிகளும் இருக்கதான் செய்வார்கள். எனவே இவ்வாறு மெயில்கள் வந்தால் தெளிவாக இருக்கவும். ஜாக்கிரதை!!

  3. //airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin //இது உண்மை அல்ல. வோடாபோன் நிறுவனம் ஏர்டெல்லுக்கு சரியான போட்டி போடுகிறது. வெர்ஜின் மொபைல் அப்படின்னு ஒரு நிறுவனம் இருப்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. அப்படி இருந்தாலும் ஏர்டெல் இயங்குவது GSM நுட்பத்தில் ஆனால் வெர்ஜின் இயங்குவது CDMA நுட்பத்தில். உங்களின் இந்தியாவுக்கெதிரான துவேஷம் நன்றாக தெரிகிறது… நல்லா இருங்கடே!!

  4. அது துவேசம் இல்லை ,இந்தியா மீதான எம் நம்பிக்கையும் , எதிர்பார்ப்பும் எமIlற்றபட்டதால் எதிர்ப்பாக மாறியுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s