ஐநூறு ஆண்டுகளாய் தொடர்ந்தும் வெள்ளையனிடம் ஏமாறும் இந்தியா….

அப்துல் கலாம் போன பின் இந்தியாவின் வல்லரசு கனவுகளும் இந்திய அரசின் கையாலாகத தனத்தினால் கிடப்பில் போடப்பட்டே இருக்கிறது. சந்திராயன் போன்ற சின்ன சின்ன சாதனைகளை வைத்துக்கொண்டே இந்திய சந்தோசப் பட்டுக்கொள்ளும் ஆயின் இன்னும் பலநூறு வருடங்களுக்கு வல்லரசு கனவுகளின் வடிவம் மட்டுமே மாறி கொண்டு இருக்கும். கனவுகள் அப்படியே தான் இருக்கும். இந்தியர்களும் வழமை போலவே அமெரிக்காவுக்கு பின் தள வேலைகளை மட்டுமே செய்து கொண்டு இருப்பார்கள்.

இந்தியாவின் மிகப் பெரிய மக்கள் தொகை மற்றும் சந்தை வாய்ப்புக்களுக்காக மட்டுமே உலக நாடுகள் இந்தியாவில் அக்கறை காட்டுகின்றன. முடியுமானவரை இந்தியாவில் தமது தொழிலை நிறுவி , மிக மலிவான விலையில் ஊழியத்தையும் சுரண்டிச்செல்வதுமே அந்த நாடுகளின் அக்கறையின் பின்னணி. இதன் அடிப்படையிலேயே பல கணக்கில் அடங்காத வெளிநாடு நிறுவனங்கள் தமது தொழிலை இந்தியாவில் நிறுவி வியாபித்து , கிளை பரப்பி மக்களின் பணத்தை சுரண்டி தங்கள் நாட்டுக்கு இலாபமாக எடுத்து செல்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் இந்திய நிறுவனங்களை விட இந்தியாவில் கால்பதித்திருக்கும் வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களே அதிக சந்தைப்பங்கும் இலாபமும் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக தொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையும் செயற்பாடுகளையும் முடுக்கி விட்டிருக்கின்றன. இந்தியாவின் அதிகமான வாடிக்கையாளர்கள் இப்போது இந்த நிறுவங்களின் பொருள்களையே அதிகம் ஆதரிக்கிறார்கள். இதேபோல வங்கித்துறையில் ing, விளம்பரத் துறையில் leo burnard, எண்டு எந்த துறையை எடுத்தாலும் எதோ ஒரு பல்தேசிய கம்பெனி தான் முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு மூன்று வினாடி தோறும் ஒரு LG தயாரிப்பு விற்பனை யாகிறதாம். இதை அந்த நிறுவனமே பெருமையாக சொல்கிறது..இதையும் இந்தியர்கள் சந்தோசமாக கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இருபத்தைந்து வருடமாக இந்தியர்கள் maruthi suzuki யிலேயே வீடு திரும்புகிரார்கலாம். எனவே இருபத்தைந்து வருடமாக அந்த நிறுவனத்தின் இலாபமும் ஜப்பானுக்கு அனுப்படுகிறது எண்டு தானே அர்த்தம். இப்படி எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம் , கடைசியாக தமிழகத்துக்கு வந்த catapiller வரை.

அன்று வெள்ளைக்காரன் மிளகு , கராம்பு, பட்டுத்துணி என்று இந்தியாவில் மக்களின் உழைப்பை வைத்தே தனக்கு தேவையானவற்றை திருடி/சுரண்டிச் சென்றான் , இன்றும் வெள்ளைக்காரன் தனக்கு தேவையா மலிவான உழைப்பையும் , தேவையான பணத்தை இலாபம் என்ற முறையிலும் திருடிச்செல்ல சட்ட பூர்வமாக அனுமதிக்கிறோம் என்றால் …..ஐநூறு வருடமாக நாம் மாற வில்லை எண்டு தானே அர்த்தம்.

எனவே தேவை இல்லாத வல்லரசு கனவுகள் காண்பதை விட்டு , அன்று போல் இன்றும் நாம் வெள்ளையனிடம் ஏமாறும் அடிமைகளே என்பதை வரட்டு கவ்ரவம் பார்க்காமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s